For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்த அரிசிக்கு ரூ.233 கோடி பணம் கேட்கும் மத்திய அரசு.. கேரள அரசு ஷாக்

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவியாக அளித்த அரிசிக்கு பதிலாக கேரளா அரசு 233 கோடி ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கொடுத்த அரிசிக்கு ரூ.233 கோடி பணம் கேட்கும் மத்திய அரசு- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவியாக அளித்த அரிசிக்கு பதிலாக கேரளா அரசு 233 கோடி ரூபாய் பணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லையென்றால் இந்த பணம் வெள்ளம் நிவாரண நிதியில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றுள்ளது.

    கேரளாவில் தற்போதுதான் மழை ஓய்ந்துள்ளது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

    கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தால் பல வருடம் அவர்கள் பின்னோக்கி சென்று இருக்கிறார்கள்.

    உதவி

    உதவி

    கேரளாவிற்கு மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. அது மட்டும் இல்லாமல் எரிபொருள், சிலிண்டர் ஆகியவைகளை வழங்கியது. மேலும் அவசர உதவியாக பல்வேறு கிடங்குகளில் இருந்து 89,540 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியது.

    பணம் கேட்கிறார்கள்

    பணம் கேட்கிறார்கள்

    இந்த நிலையில்தான் இந்த அரிசிக்கு மத்திய அரசு பணம் கேட்கிறது. அதாவது இது அவசரத்திற்கு கொடுத்தது, ஆனால் இதற்கான பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக கேரளா அரசிடம் மத்திய அரசு, 233 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளது.

    கொடுக்கவில்லை என்றால்

    கொடுக்கவில்லை என்றால்

    இந்த பணத்தை கேரளா அரசு கொடுக்கவில்லை என்றால் அதை திரும்ப பெற மத்திய அரசு திட்டம் ஒன்று வைத்துள்ளது. அதன்படி, கேரளா இதை திரும்ப கொடுக்கவில்லை என்றால், ஏற்கனவே அறிவித்துள்ள ரூபாய் 600 கோடி ரூபாய் நிதி உதவியில் இருந்து இதை கழித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதை குறித்து நேற்று கேரளா அரசுக்கு அறிவிப்பு சென்றுள்ளது.

    ராணுவ வீரர்களுக்கு நிதி

    ராணுவ வீரர்களுக்கு நிதி

    அதோடு கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவம் அதற்காக சேவை கட்டணம் வசூலிக்க உள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் வெள்ளத்தின் போது நிதி உதவியாக ரூபாய் 1200 கோடி வழங்கப்பட்டது. அதில் ராணுவம் சேவைக்கட்டணமாக ரூபாய் 500 கோடியை எடுத்துக் கொண்டது. இது கேரளாவிலும் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Kerala Floods: Central Govt need the money back for the rice they provided for relief. They need Rs 233 crores for the 89,540 metric tonne of rice they have provided.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X