ஏமனில் கடத்தப்பட்ட பாதிரியார் டாம் உழுன்னாலில் மீட்கப்பட்டார்.. சுஷ்மா மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஐ.எஸ்.,தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் விரைவில் விடுவிப்பு-வீடியோ

  டெல்லி : ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னாலில் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

  கேரளாவைச் சேர்ந்த 56 வயது கிறிஸ்தவ பாதிரியார் டாம் உழுன்னாலில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியவர். சமூக சேவையில் கொண்ட ஆர்வத்தால் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கோலார் தங்கவயலில் உதவி பங்கு தந்தையாக இருந்தபோது, ஏராளமான தமிழர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

   Kerala Fr. Tom Uzhunnalil, who was abducted by the terrorist group rescued

  கடந்த ஆண்டு பாதிரியார் டாம் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏமனில் முதியோர்கள், அகதிகள், நோயாளிகளுக்கு தொண்டாற்றி வந்தார். இந்நிலையில் மார்ச் 4, 2016ல் தொண்டு இல்லத்துக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 4 கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பாதிரியார் டாம் உட்பட 15 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

  தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் டாம் உழுன்னாலிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு கிறிஸ்தவ அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனையடுத்து அவரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் பாதிரியார் உயிருடன் உள்ளதாகவும் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாதிரியார் டாம் உழுன்னில் ஏடன் நாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வாடிகன் சிட்டி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kerala Fr. Tom Uzhunnalil, who was abducted by the terrorist group, on 4th March, 2016, from Yemen, rescued MEA Sushma swaraj tweets

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற