For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள சட்ட கல்லூரி மாணவி பலாத்காரம், கொலை.. காஞ்சியில் கைதான தொழிலாளி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொச்சி: சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட காமுகன் கூலித்தொழிலாளி அமீருல் இஸ்லாம் குற்றவாளி என்று கொச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

பலாத்காரத்திற்கு பிறகு இவரின் பெண் உறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொலை நடந்தது.

காஞ்சியில் கைது

காஞ்சியில் கைது

இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற 23 வயது இளைஞரை காஞ்சிபுரத்தில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற இடத்தில் போலீசார் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் கைது செய்தனர். விசாரணையில், அந்த கொலைக்குப் பின்னர் சொந்த மாநிலமான அசாம் சென்ற அமீருல் பின்னர், காஞ்சிபுரம் வந்து அங்கு வேலை பார்த்து வந்துள்ளது தெரியவந்தது.

காமக்கொடூரன்

காமக்கொடூரன்

மேலும், அமீருல் இஸ்லாம், ஒரு காமக்கொடூரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. எப்போதும் செக்ஸ் நினைவுடனேயே, அது சார்ந்த நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது அங்கு குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்த்து ரசிப்பது இவரது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டிருந்தபோது, சில பெண்கள் இதை பார்த்துவிட்டனர். அமீருலை திட்டி அனுப்பியுள்ளனர். அப்போது ஜிஷாவும் இதை பார்த்து கேலி செய்து சிரித்துள்ளார்.

ஆடுடன் உடலுறவு

ஆடுடன் உடலுறவு

அமீருல் இஸ்லாம் தங்கியிருந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெண் ஆடு உடன் அவர் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆட்டின் மர்ம உறுப்பில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததும், ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்பை சிதைத்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் போலீசாருக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

குற்றவாளி

குற்றவாளி

இதனிடையே கொச்சி நீதிமன்றத்தில் 18 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்ட அமீருல் இஸ்லாம்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக 100 சாட்சியங்களிடம் கோர்ட் விசாரணை நடத்தியது. கொலையாளியை பிடிக்க 5000 பேருக்கும் மேல் விரல் ரேகையை சேகரித்தனர் போலீசார். 20 லட்சம் தொலைபேசேி அழைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன்பிறகே கொலையாளியை போலீசார் கண்டுபிடித்தனர். கொலையாளி விட்டுச் சென்ற செருப்பில் இருந்த அவரின் ரத்தக்கறை மாதிரி இந்த வழக்கில் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக திரும்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
18 months after the law student was raped and murdered in Kerala, the main accused,has been convicted by a local court in Kochi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X