விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த மூன்று தமிழக பயணிகள்.. விவரம்
கோழிக்கோடு: விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் தமிழக பயணிகள் முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி துணை விமானி மற்றும் குழந்தை உள்பட 16 பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் 170 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக பயணிகள் 3 பேர் இந்த விமானத்தில் பயணித்திருப்பது ஏர் இந்தியா வெளியிட்டுளள பயணிகள் பட்டியலில் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து வந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் பணியாற்றி பலர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதில் தமிழக பயணிகள் முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஷாஜகான் நீலகிரி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் ஆவர். முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஆகியோர் துபாய் வாழ் தமிழர்கள் ஆவர். இவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இந்த விபத்தால் விமானத்தில் பயணித்த பெரும்பலான பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.அனைவரும் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications