For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள பிஷப் பிராங்கோ கைது.. 3 நாள் விசாரணைக்குப் பின் போலீஸ் அதிரடி!

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள பிஷப் பிராங்கோ தற்போது கேரளா போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கடும் கோரிக்கைக்கும் பின்பும், போலீஸ் மீதான விமர்சனங்களுக்கு பின்பும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுதான் இவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் சர்ச் அறிவித்தது.

கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பிஷப் விவகாரம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார். பிராங்கோவிற்கு எதிரான போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விசாரணை நடக்கும்

விசாரணை நடக்கும்

இதுகுறித்த விசாரணை வரும் 24 ஆம் தேதி நடக்க உள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கேரள பிஷப் பிராங்கோ தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இவரை தற்காலிகமா நீக்குவதாக வாடிகன் அறிவித்து இவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது.

கொச்சியில் பிடித்தனர்

கொச்சியில் பிடித்தனர்

இந்த நிலையில் பாலியல் புகாருக்கு உள்ளாகிய கேரள பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டு இருக்கிறார். கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்போது போலீஸ் இதுகுறித்த முறையான தகவலை வெளியிடவில்லை.

முதல் நபர்

முதல் நபர்

கேரளா பிஷப் பிராங்கோதான் கைது செய்யப்படும் முதல் கத்தோலிக் பிஷப் ஆவார். இது கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இவரை ஒருவார கஸ்டடியில் எடுக்க போலீஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Kerala Police arrested Catholic bishop Franco accused of raping nun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X