10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 65 வயது பாதிரியார் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (65). இவர் கந்தன்திட்டா பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த ஓராண்டாக பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் விடுமுறை நாள்களில் குழந்தைகளுக்கு பைபிள் குறித்த போதனையையும் வழங்குகிறார்.

 Kerala Priest sexually assaulted 10-Year-old inside church

அதேபகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அந்த பாதிரியாரிடம் பைபிள் கற்று வந்தார். அது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பைபிள் கற்றுக் கொள்ள அந்த சிறுமியை சர்ச்சில் அவரது தந்தை விட்டுவிட்டு சென்றார்.

குறிப்பிட்ட நேரம் கழித்து வகுப்புகள் முடிந்திருக்கும் என கருதிய அந்த சிறுமியின் தந்தை தேவாலயத்துக்கு சென்றார். அப்போது அந்த பாதிரியார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நேரில் கண்டு அதிர்ந்தார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீஸார் தேவராஜைக் கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேவராஜை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 65-year-old priest was arrested in Kerala capital Thiruvananthapuram for alleged sexual assault on a minor girl, inside a church.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற