யாருன்னு பார்த்தீங்களா.. நம்ம "குழந்தை" தான்.. திடீர்னு மெலிந்து போய்.. ஷாக்கான வடகொரிய மக்கள்
உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார் கிம்ஜாங் உன்
பியொங்யாங்: திடீர்னு ஸ்லிம் ஆகி ஷாக் தந்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.. என்னாச்சு அதிபருக்கு?
உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்..
அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாருக்குமே கண்டுபிடிக்க முடியாது.. பிறகே அவரே மக்கள் முன் தோன்றுவார்.. மறுபடியும் காணாமல் போவார்.

காணவில்லை
இப்படித்தான் ஒருமுறை காணாமல்போய் மறுபடியும் திரும்பி வந்தபோது உடல் எடை கூடியிருந்தார்.. ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தது.. இப்போது அந்த நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.. வறுமை சூழ்ந்துள்ளது.. இதைதவிர, ஏராளமான பொருளாதார சிக்கல்கள், பொருளாதாரத் தடை, உணவுப் பஞ்சம் என வரிசைக்கட்டி நிற்கின்றன.

தகவல்கள்
இந்தநிலையில், கிம் ஜாங் உன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நிறைய நோய்கள் உடம்பில் குடியேறி உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகின.. அதுமட்டுமல்ல, கிம் ஜாங் போலவே இருக்கும் வேறு ஒருத்தர்தான், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும்கூட செய்திகள் வந்தன. .

உடல்எடை
இப்படிப்பட்ட சூழலில்தான் மறுபடியும் கிம் ஜாங் உன் மக்கள் முன் தோன்றி உள்ளார்.. அவர் எங்கும் காணாமல் போகவில்லையாம்.. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாராம்.. இப்போது கிம் 20 கிலோ எடை குறைத்துவிட்டதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதாவது ஆரம்பத்தில் 140 கிலோவில் இருந்துள்ளார்.. இதைதான் 120-க்கு கஷ்டப்பட்டு கொண்டு வந்துள்ளார்...

சாப்பாடு
கிம்எப்போதுமே மாட்டுக்கறியைதான் ரசித்து சாப்பிடுவார்.. ஆனால், இவர் டயட்டில் உள்ளதாலோ என்னவோ, 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும், பஞ்சம் நீங்கும்வரை மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் வடகொரிய மக்கள் வறுமையில் தவித்தபோது, ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று சொன்னவர்தான் கிம்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications