For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவை புரட்டி போட்ட புயல்.. 10 பேர் பலி, பலர் காயம்!

நேற்று காலையில் இருந்து கொல்கத்தாவில் வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தாவை புரட்டி போட்ட புயல்.. வீடியோ

    கொல்கத்தா: நேற்று காலையில் இருந்து கொல்கத்தாவில் வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவில் பெரிய அளவில் புயல் வீசியது. ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த புயல் வீசி வந்தது. அதன் பின், மிகவும் வேகமான காற்று வீசி வந்தது. இந்த திடீர் பருவநிலை மாற்றம் மக்களை கஷ்டப்பட வைத்தது.

    Kolkata Storm: 10 people died, several injured in one day

    முதலில் 80 கிமீ வேகத்தில் தொடங்கிய புயல் போக போக அதிக வேகமெடுத்தது. இதனால் கடைசி நேரத்தில் 105 கிமீ வேகத்தில் புயல் வீசியது. இது மரங்கள், சிறிய வீடுகளை அடியோடு பெயர்த்து எடுத்தது.

    இதனால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அடியோடு இரண்டு போக்குவரத்தும் நாள் முழுக்க நிறுத்தப்பட்டது. பின் 2 மணி நேரம் விமானம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    இந்த புயல் காரணமாக மொத்தம் 10 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். பலர் திடீர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு காலநிலை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பல இடங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது.

    English summary
    10 people died, several injured in one day due to heavy storm in Kolkata. Now climate back to normal in many places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X