For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி!

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: துபாயில் இருந்து நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பல்வேறு கனவுகளுடன் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள். ஆனால் நேற்று நடந்த விமான விபத்து இவர்களின் கனவை கலைத்து உள்ளது.

Recommended Video

    கேரளா விமான விபத்து... உருக வைக்கும் துணை விமானியின் சோகம்

    கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது
    .
    இந்த விமானத்தில் 184 பேர் பயணம் செய்தனர். விமானத்தின் பைலட்கள் இருவரும் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோழிக்கோடு விமான விபத்து... புதிய தகவல்.. இதனால் விபத்தா? கோழிக்கோடு விமான விபத்து... புதிய தகவல்.. இதனால் விபத்தா?

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த விமானம் மத்திய அரசு மூலம் வந்தே பாரத் திட்டத்திற்காக செயல்பட்ட விமானம் ஆகும். துபாயில் இருந்து கேரளாவிற்கு லாக்டவுனுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விமானம் ஆகும் இது. இதனால் இந்த விமானத்தில் பயணித்த 184 பேரும் முக்கியமான அவசர காரணங்களுக்காக கேரளா வந்து இருக்கிறார்கள். கேரளா திரும்புவதற்கு இவர்கள் மத்திய அரசிடம் அளித்த விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

    கலக்கம்

    கலக்கம்

    அதாவது வந்தே பாரத் விமானத்தில் நாடு திரும்ப முறையான காரணங்களை கூற வேண்டும். இ பாஸ் எடுக்க காரணம் கூறுவது போலவே இதற்கும் காரணங்களை தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் வந்த மலையாளிகள் எல்லோரும் மிக மிக அவசர காரணங்களை குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலானோர் மெடிக்கல் எமர்ஜென்சி என்று குறிப்பிட்டுள்ள்ளனர்.

    வேலையா இல்லை

    வேலையா இல்லை

    இன்னும் சிலர் துபாயில் எனக்கு வேலை போய்விட்டது. இங்கே பிழைக்க வாய்ப்பு இல்லை. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறி டிக்கெட் எடுத்துள்ளனர். இன்னும் சிலர் உறவினர்கள் இறந்துவிட்டனர். அவசர திருமணம் என்று கூறி டிக்கெட் எடுத்துள்ளனர். பலர் தங்கள் வீட்டுடன் இணைய வேண்டும், துபாயில் சிக்கிக்கொண்டோம் என்று காரணம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    கனவு கலைந்தது

    கனவு கலைந்தது

    இப்படி கேரளா திரும்ப துபாயில் இருந்து டிக்கெட் எடுத்த எல்லோரும் அவசர காரணங்களை குறிப்பிட்டுள்ளனர் . குடும்பத்தோடு இணைய வேண்டும். புதிய வேலையில் சேர வேண்டும். திருமணம் செய்ய வேண்டும் என்று, பல்வேறு கனவுகளுடன் கேரளாவிற்கு வந்து இருக்கிறார்கள். ஆனால் சரியாக கேரளா மண்ணை தொடும் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி அவர்களின் கனவை கலைத்து உள்ளது... எப்படியாவது குடும்பத்தோடு 7-8 மாதங்கள் பின் இணையலாம் என்று நினைத்தவர்களின் கனவு கலைந்து போய் உள்ளது.

    English summary
    Kozhikode Air India flight accident: The various reason people told to return home from Dubai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X