ஆம் ஆத்மி தலைவருக்கு எதிராக பாலியல் புகார் கூற, இளம் பெண்ணை தூண்டியது காங்கிரசா?
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாசுக்கு எதிராக பேட்டியளிக்கும்படி பெண்ணுக்கு காங்கிரஸ் நிர்வாகி பயிற்சியளிப்பது போல வெளியான வீடியோவால் இந்த பிரச்சினையில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாசுக்கும், தனக்கும் தொடர்புள்ளதாக வதந்தி பரப்பப்படுவதாகவும், இதை அவர் மறுக்க வேண்டும் என்றும் அமேதி பகுதியை சேர்ந்த இளம் பெண் கூறிய புகார் தற்போது பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், அந்த பெண்ணிடம், பேச்சுக்கொடுப்பது போலவும், பத்திரிகையாளர்களிடம் எதையெல்லாம் சொல்ல வேண்டும் என்பது குறித்து அவர் பயிற்சி கொடுப்பது போலவும் காட்சிகள் உள்ள வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பத்திரிகைகளில் பேசி பழக்கம் இல்லையென்பதால், எனக்கு அந்த நிர்வாகி சொல்லிக் கொடுத்தார். மற்றபடி, அவர் சொல்லி நான் புகார் கூறவில்லை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, ஆம் ஆத்மி பெயரை கெடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி முயலுவது உறுதியாகியுள்ளதாக ஆம் ஆத்மி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications