For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிறி ஓட்டம்.. கும்பமேளாவுக்கு போய்திரும்பிய 20 பேர்.. ஆஸ்பத்திரியிலிருந்து எஸ்கேப்.. பதறும் மாநிலம்

20 கொரோனா நோயாளிகள் தப்பி மாயமாகி உள்ளதால், தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

டேராடூன்: கும்பமேளாவுக்கு சென்று தொற்று பாதித்த 20 பேரை காணோமாம்.. ஆஸ்பத்திரியில் இருந்து இவர்கள் தப்பிவிட்டதால், உத்தர்காண்ட் மாநிலமே பதட்டமாகி உள்ளது.. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Recommended Video

    நிர்வாண சாதுக்களின் Kumbh Mela..கொரோனா பரவல்..பீதியில் வட இந்தியா | Oneindia Tamil

    இப்போது கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது.. இந்த 2வது அலையானது, முதல் அலையைவிட படுபயங்கரமானது என்றும், பன்மடங்கு வீரியம் கொண்டது என்றும், வேமாக பரவக்கூடியது என்றும், எச்சரிக்கப்பட்டு வருகிறது.

    எனினும், பல மாநிலங்களில் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.. பலர் உயிரிழந்து வருகிறார்கள்.. பலர் தீவிரமான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.. பலர் பிணங்களை எரிக்க முடியாமல், சுடுகாடுகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்..

    "நிர்வாண சாதுக்கள்" தலைவர் பலியாகியும்.. குறையாத பக்தர்கள், பகீர் பாசிட்டிவ்கள்.. பீதியில் வடஇந்தியா

     பாதிப்பு

    பாதிப்பு

    அந்த வகையில் 8 மாநிலங்களில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது... இது மொத்த பாதிப்பில் 70 சதவிகிதமாகும்... இதில் ஒன்றுதான் உத்தரகாண்ட்.. ஏற்கனவே இங்கு தொற்று அதிகமாகி வரும்நிலையில், பல பேர் கும்பமேளா நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர்..

     கும்பமேளா

    கும்பமேளா

    யாரெல்லாம் கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகிறார்களோ அவர்களுக்கு, அங்கேயே ரயில்வே ஸ்டேஷனிலேயே டெஸ்ட் எடுக்கப்படுகிறது.. பாசிட்டிவ் வந்தால், அப்போதே ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு விடுகின்றனர்.. இப்படி ஹரித்வாரில் மட்டும் இரண்டே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது... இப்படித்தான், உத்தரகாண்ட் மாநிலத்திலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. ஆனால், அதில் 20 பேர் தப்பி மாயமாகி உள்ளனர்..

     வழக்குகள்

    வழக்குகள்

    இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சய் குன்ஜால் சொல்லும்போது, "20 பேரும் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி உள்ளனர்.. விதிமுறைகளை மீறி, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காக ஓடிவந்த அந்த 20 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன... அவர்களைத் தேடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

     விதிமுறைகள்

    விதிமுறைகள்

    முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தில் பல கெடுபிடிகள் போடப்பட்டுள்ளன.. எனினும் இது மேலும் தீவிரமாகி உள்ளது.. முதலமைச்சர் தீரத் சிங் ராவத், மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளுடன் நடத்திய அவசர கூட்டத்தில், பொதுமக்கள் மாஸ்க் போடாவிட்டால் ரூ.200 முதல் ரூ.500 ஆக அபராதத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்..

    English summary
    Kumbhmela: Police searchfor 20 absconding covid patients in Uttarkhant
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X