For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகன் மோடியின் பிறந்த நாளுக்காக விசேஷ லட்டுகள் தயாரிக்கும் தாயார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: தனது 64வது பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற உள்ளார். அவருக்கு வழங்குவதற்காக லட்டுகள் தயாராகி வருகின்றன.

மோடி பிரதமர் ஆன பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரை வரவேற்பதற்கும், அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கும் குஜராத் தயாராகி வருகிறது.

பிரதமரின் வருகையையொட்டி, அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்காக குஜராத் மாநில அரசும், அம்மாநில பா.ஜ.க.வினரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Laddoos for Narendra Modi when he meets mother on his 64th birthday

தாயாரிடம் ஆசி

மோடியின் தாயார் ஹீரா பென்(95) தனது மற்றொரு மகனான பங்கஜ் மோடியுடன் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் வசித்து வருகிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு சொந்த மாநிலமான குஜராத்துக்கு இதுவரை வராத நரேந்திர மோடி, தனது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் தாயாரிடம் ஆசி வாங்குவதைப் போல இந்த பிறந்த நாளின்போதும் ஹிராபாவிடம் ஆசி பெற தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

தனி விமானம் மூரம்

டெல்லியில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு தனிவிமானம் மூலம் 16-ஆம் தேதி பிற்பகல் வந்து சேரும் மோடியை மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, பரிசளித்து கவுரவிக்கவுள்ளனர். இது தவிர, மாநில அரசின் சார்பிலும் பிரதமருக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பு வழங்கப்படும்.

அம்மா தயாரிக்கும் லட்டு

பிறந்த நாளின்போது தன்னிடம் ஆசி பெற வருகை தரும் பிரதமர் மோடிக்காக அவருக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை அவரது தாயார் தயாரித்து வருகிறார்.

அழகாகும் வீடுகள்

அவரது வருகையையொட்டி மோடியின் சகோதரர் வசிக்கும் இல்லத்தின் புல்வெளி மற்றும் உள்பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணிகளை மாநில போலீசார் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

இனிப்பு வகைகள் தயார்

பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான 'சுர்மா கே லாடூ(லட்டு)', லப்ஸி, கன்ஸர் போன்ற இனிப்பு வகைகள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாயாரிடம் ஆசி

தாயன்பை மறவாமல், போற்றி, மதிப்பளித்துவரும் நரேந்திர மோடி, ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தின்போதும் தனது தாயாரின் பாதங்களை தொட்டு வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட உதவி

செப்டம்பர் 17-ம் தேதி நரேந்திர மோடியின் பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி, அன்று காலை காந்தி மந்திரில் நடைபெறும் ஏழை, எளிய மக்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

சீன அதிபருடன் சந்திப்பு

அன்றைய தினம் குஜராத்துக்கு வரும் சீன அதிபர் க்ஸீ ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

English summary
Gujarati sweets such as Churma ke laddoo, lapsi and kansar will be offered to Prime Minister Narendra Modi when he seeks blessings of his mother on September 17, a day that is his birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X