For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்ததால் ஆச்சாரம்... கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்...

Google Oneindia Tamil News

Recommended Video

    சாஸ்திரி நினைவிடத்துக்கு வந்த பிரியங்கா..கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்...வீடியோ

    வாரணாசி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வந்து சென்றதால் சாஸ்த்ரி நினைவிடத்தை கங்கை நீரால் பாஜகவினர் சுத்தம் செய்துள்ளனர். இது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அகமதாபாத்) நகரில் இருந்து வாரணாசி வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி படகில் பயணித்து பிரசாரம் மேற்கொண்டார். கங்கை கரையோரத்தில் வசிக்கும் மக்களிடம் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்டார்.

    Lal Bahadur Shastri statue cleansed after Priyanka Gandhis floral tribute

    அதன் பின்னர் வாரணாசி வந்தடைந்த பிரியங்கா காந்தி, அங்கு ராம்நகரில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்துக்கு சென்று சில நிமிடங்கள் நின்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் பிரியங்கா காந்தி வந்து சென்ற பின்னர், பாஜக தொண்டர்கள் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தை கங்கை தண்ணீரை ஊற்றி கழுவி விட்டார்கள். பிரியங்கா காந்தியின் கணவர் ஊழல் குற்றாச்சாட்டி சிக்கியவர். அப்படிப்பட்டவரின் மனைவியை சாஸ்திரியின் நினைவிடத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என பாஜக தொண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    லால் பகதூர் சாஸ்திரிக்கு அவமரியாதை... பிரியங்கா காந்தி மீது ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு லால் பகதூர் சாஸ்திரிக்கு அவமரியாதை... பிரியங்கா காந்தி மீது ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு

    இதனிடையே பாஜகவினரின் இந்த செயல் கேவலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. லால் பகதூர் சாஸ்த்ரி காங்கிரஸ் தலைவர் என்றும் பிரியங்கா காந்தியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Lal Bahadur Shastri statue cleansed after Priyanka Gandhi's floral tribute in varanasi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X