For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நில ஆர்ஜித மசோதா குறித்து இன்று விவாதிக்கிறது கேபினட்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கான அவசர சட்டம் குறித்து விவாதிக்க இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திருத்தம் செய்து கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மேலும் சில திருத்தங்களை செய்து தற்போதைய மோடி தலைமையிலான அரசு அவசர சட்டமாக கொண்டு வந்தது.

Land Acquisition Bill: PM Modi to hold high-level meeting today

இந்த அவசர சட்டம் 6 மாதம் மட்டுமே செல்லும் என்பதால் இதை சட்டமாக்க நாடாளுமன்ற லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் எளிதாக மசோதா நிறைவேறியது. ஆனால், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மசோதாவை எதிர்த்தன.

இதனால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. அத்துடன் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் வரும் 5-ந்தேதியுடன் காலாவதியாகிறது. இதனால், மேலும் 6 மாதத்திற்கு இந்த அவரச சட்டத்தை கொண்டு வரலாமா என்று மத்திய அரசு யோசிக்கிறது.

இதுகுறித்து முடிவு எடுக்க இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய அமைச்சரவை டெல்லியில் கூடுகிறது. அப்போது நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

English summary
Prime Minister Narendra Modi will hold a Cabinet meeting on Tuesday to discuss the Land Acquisition Ordinance that will lapse on April 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X