For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13 மரண தண்டனைக் கைதிகளின் மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

Larger bench of SC hears pleas of death row convicts
டெல்லி: தங்களது கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி 13 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நேற்று விசாரணையை தொடங்கியது.

இம்மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், கீர்த்தி சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என்றும் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதா என்றும் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கோலின் கொன்ஸ்லேவ்ஸ் ஆஜராகி, கருணை மனுக்கள் நிராகரிப்பட்டால், அதை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் கோரும் தகவல்களை வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

கருணை மனுக்கள் நிராகரிப்படுவதற்கான காரணமும் தெரிவிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

English summary
The Supreme Court today commenced hearing on a batch of petitions filed by condemned prisoners seeking commutation of their death sentence into life imprisonment on account of delay in carrying out the execution following dismissal of their mercy petitions by the President. A three-judge bench headed by Chief Justice P Sathasivam started hearing on 13 petitions filed by convicts whose execution of sentence was stayed by the apex court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X