For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாத்தூரைப் போல தண்ணீரின் வரவுக்காக வறண்ட நாவுகளுடன் காத்துக் கிடக்கும் லெனாபூர்!

By Siva
Google Oneindia Tamil News

லெனாபூர்: மகாராஷ்டிராவில் லாத்தூரை அடுத்து லெனாபூரில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூரில் ஏற்கனவே கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் அருகில் உள்ள ஊரில் இருந்து ரயில் மூலம் லாத்தூருக்கு நீர் கொண்டு வரப்பட்டது.

Lenapur: Another Marathwada Village Goes Thirsty

இந்நிலையில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லெனாவூரிலும் தண்ணீர் பஞ்சமாக உள்ளது. அங்கு உள்ள ஆறும் வற்றிவிட்டது. தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு பெண்களும், குழந்தைகளும் தெருத் தெருவாக அலைவதை பார்க்கையில் பரிதாபமாக உள்ளது.

வற்றிப் போன ஆற்றை பார்த்து பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். மாநில அரசு தங்கள் கஷ்டங்களை பார்த்தும் பார்க்காதது போன்று உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை நம்பி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

English summary
After Latur, Lenapur in Maharashtra is facing severe water crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X