For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் நாளன்று பிறந்த குழந்தைக்கு.. என்ன பெயர் வச்சிருக்காங்க பாருங்க இந்த அப்பாம்மா!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் நாளில் பிறந்த குழந்தைக்கு வாக்களிப்பு என பெயர் வைத்த பெற்றோர்- வீடியோ

    இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நாள் அன்று பிறந்த குழந்தைக்கு வாக்களிப்பதை அர்த்தப்படுத்தும் வகையில் அதன் பெற்றோர் பெயர் வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்துக்கு கடந்த 28-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காடேகான் தொகுதியில் வாக்களிப்பதற்காக சந்தோஷ் (26) என்பவர் பதற்றத்துடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

    அவர் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வந்தவுடன் வாக்களித்துவிட்டு விறுவிறுவென மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    வாக்களிப்பது

    வாக்களிப்பது

    இதையடுத்து அந்த குழந்தைக்கு மட்தான் (வாக்களிப்பு) என்று பெயர் வைக்க அந்த தம்பதியினர் முடிவு செய்தனர். இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், நாம் எந்த சூழலில் இருந்தாலும் வாக்களிப்பதை விடக் கூடாது.

    மாற்றலாம்

    மாற்றலாம்

    எனவே என் மாநிலத்தில், என் பகுதியில் உள்ள அனைவருக்கும் வாக்களிப்பதை ஊக்கப்படுத்துவதற்காகவே எனது குழந்தைக்கு அந்த பெயரை சூட்டியுள்ளேன். இதனால் பள்ளியில் பெயர் கொடுக்கும் போது சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அப்போது வேண்டுமானால் மகன் விருப்பப்பட்டால் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    பெயர் வைப்பது குறித்து என் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் கூறியவுடன் அனைவரும் ஒப்புக் கொண்டனர். இந்த பெயர் சட்டரீதியான சிக்கலையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்.

    தூரம்

    தூரம்

    சந்தோஷ் மனைவி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் வாக்குச் சாவடிக்கும் 130 கி.மீ. தூரம் ஆகும். இவர் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வாக்களித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்குள் குழந்தையே பிறந்துவிட்டது.

    English summary
    A new born who was born on Madhya Pradesh Assembly election named as Matdaan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X