பூதாகரமாகும் மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு
லக்னோ: மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட்டை சேர்த்த நெஸ்ட்லே நிறுவனம் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டமேட் உள்ளதை உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து மேகி நூடுல்ஸுக்கு தடை விதிப்பது குறித்து உத்தர பிரதேச மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு
உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனம் மீது பாரபங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக நெஸ்ட்லேவின் நாகல் கலான் இன்டஸ்ரியல் ஏரியா யூனிட், டெல்லியைச் சேர்ந்த நெஸ்ட்லே இந்தியா லிமிடெட், பாரபங்கியில் உள்ள ஈஸி டே கடை, டெல்லியில் உள்ள ஈஸி டே நிறுவனம் மற்றும் அதன் எப்.எம்.சி.ஜி. மேனேஜர்கள் மோகன் குப்தா, ஷபாப் ஆலம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்
மேகி நூடுல்ஸ் சத்தானது என்று விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீக்சித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநில வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஈயம்
மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் மட்டும் அல்லாது ஈயமும் அனுமதிக்கப்பட்டதை விட 17 முறை அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள ஈஸி டே கடையில் இருந்த மேகி நூடுல்ஸை ஆய்வு செய்ததில் தான் இது தெரிய வந்தது.

மத்திய அரசு
மேகி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் மேகி விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications