வெளியில் மடாதிபதி! உள்ளே காம மிருகம்! 17 வயது சிறுமியை 18 மாதங்களாக பலாத்காரம் செய்த சாமியார்.. கைது
ஜெய்பூர்: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வரும் மடாதிபதி ஒருவர் 17 வயது சிறுமியை 18 மாதங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் 'மஹந்த் சர்ஜுதாஸ்' என்பவர் ஆசிரமங்களை வைத்து நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தின் மடாதிபதியாகவும் இவரே செயல்பட்டு வருகிறார். நான்கு மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களில் பல்வேறு சிறுவர்களும், சிறுமிகளும் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு, உடை உட்பட அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சிறார்கள் இங்கு சிறு சிறு பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தானில் உள்ள ஆசிரமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் புதியதாக சேர்ந்துள்ளார். இவரது தயார் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தனது மகளை இந்த ஆசிரமத்தில் அவர் சேர்த்திருக்கிறார். இச்சிறுமி சேர்ந்த ஆறு மாதங்களில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மடாதிபதி 'மஹந்த் சர்ஜுதாஸ்' இச்சிறுமியை தனியாக அழைத்து பேச தொடங்கியுள்ளார்.

மடாதிபதி
இவ்வாறு அழைத்து பேசும் போது சிறுமியின் உடல் அங்கங்களை தொட்டு பேசியிருக்கிறார். சிறுமிக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதனால் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாள் போக போக மடாதிபதி மற்ற சிறுமிகளுக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு இந்த குறிப்பிட்ட சிறுமியை மட்டும் தனியே அழைத்து பேசியுள்ளார். சிறுமிக்கு இது குறித்து ஏதும் தெரியவில்லை என்று உணர்ந்த மடாதிபதி தனது கொடூரத்தை தொடங்கியுள்ளார். இப்படியே ஒன்றரை ஆண்டுகள் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. மடாதிபதியின் தொல்லை தாங்க முடியாத சிறுமி ஒரு கட்டத்தில் தனது நண்பரிடம் இது குறித் கூறி அழுதுள்ளார்.

புகார்
மடாதிபதியின் பிடியிலிருந்து எவ்வளவோ தப்பிக்க முயன்றும் கூட அவரால் தப்பிக்க முடியவில்லை. எனவே சிறுமி தனது தாயிடமும், உறவினர்களிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் பில்வாரா மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் நண்பனிடம் முதலில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து புகார் உண்மையென தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமியிடம் விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையையடுத்து ஆசிரமத்தின் மடாதிபதியை தேடினர்.

கைது
ஆனால் இவருக்கு சொந்தமான ஆசிரமங்கள் நான்கு மாநிலத்தில் இருப்பதால் எந்த மாநிலத்தில் இவரை பிடிப்பது என்று யோசித்து வந்திருக்கின்றனர். அப்போதுதான் இவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்திருப்பது தெரிவந்ததது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மடாதிபதி 'மஹந்த் சர்ஜுதாஸை' கைது செய்தனர். ஆனால் காவல்துறையினர் தன்னை கைது செய்வதை உணர்ந்துகொண்ட மடாதிபதி ஏதே ஒரு பொருளை உண்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அவரை அனுமதித்த காவல்துறையினர் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விசாரணை
இவர் நடத்தி வரும் ஆசிரமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் பயின்று வரும் நிலையில் இதுவரை எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இந்த ஆசிரமத்திலிருந்து வெளியேறிய சிறுமிகள் குறித்த தகவல்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் சிறுமிகள் ஏலம் விடப்படும் சம்பவம் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது ஆசிரம மடாதிபதி ஒருவர் சிறுமியை ஒன்றரை ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications