For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'

By BBC News தமிழ்
|

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறது

ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, "சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அனைத்து இடங்களுக்கும் சென்று விளையாடலாம் என நம்புகிறேன். அப்படி நடந்தால் வெவ்வேறு இடங்களில் விளையாடி ரசிகர்களுக்கும் நன்றி சொன்னதாக ஆகிவிடும். இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா, இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் அடுத்த ஆண்டு ஒரு சிறந்த கம்-பேக்கை வழங்க நான் கடுமையாக உழைப்பேன்,'' என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்வியும் அவரது பேச்சின் மூலம் எழுந்திருக்கிறது.

Mahendra Singh Dhonis last match: Is today CSK Dhoni last match in IPL

இந்த நிலையில், சி.எஸ்.கே நிர்வாகத்திடம், எம்.எஸ்.தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் நான் விளையாடுவேன், கேப்டனாக அணியை வழிநடத்துவேன் என உறுதி அளித்திருப்பதாக இ.எஸ்.பி.என் இணையதளம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தனது கேப்டன்சி பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கினார் தோனி. ஆனால் ஜடேஜா தலைமையிலான சி.எஸ்.கே அவ்வளவாக சோபிக்கவில்லை. இதனால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் தோனி.

2020, 2021 சீசன்களில் தோனி ரன் சேர்க்க தடுமாறியிருந்தாலும் இந்த முறை கணிசமான ரன்களை குவித்திருக்கிறார். 14 போட்டிகளில் 232 ரன்கள் விளாசியதோடு சராசரியாக 33.14 வைத்திருக்கிறார்.

2022 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரும் சோதனையாக முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியிலில் 9ஆவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முன்னதாக 2020ம் ஆண்டிலும் சென்னை அணி தொடர் தோல்விகளை எதிர்கொண்டது. பல விமர்சனங்களை சந்தித்த சி.எஸ்.கே, 2021ல் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்தது. தற்போது மீண்டும் சறுக்கியுள்ள சி.எஸ்கே அடுத்த ஆண்டில் ரசிகர்கள் எதிர்பார்க்கும்படியான வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=d23mvnivIVY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Mahendra Singh Dhonis last match: Is today CSK Dhoni last match in IPL
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X