For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சஹாரா தலைவருடன் புகைப்படம் எடுத்த மோடியை கைது செய்யலாமா? முடிந்தால் என்னை கைது செய்க: மமதா

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் ஊழலில் தம்மை தொடர்பு படுத்தி பேசும் பிரதமர் மோடி, சஹாரா நிறுவனத் தலைவருடன் புகைப்படம் எடுத்ததற்காக அவரை கைது செய்யலாமா? என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

சாரதா சிட் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸின் 2 எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ராவும் இதே வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Mamata Banerjee's open challenge: I dare Narendra Modi to arrest me

மமதா அமைச்சரவையில் மூத்த அமைச்சரான மதன் மித்ரா கைது செய்யப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், அரசியல் ஆதாயத்திற்காக மதன் மித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் அவரச நிலை பிரகடனம் பட்டவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த மிரட்டலை கண்டு அஞ்சப்போவதில்லை. இந்த வழக்கில் முடிந்தால் என்னை கைது செய்துபார்க்கட்டும். இந்த கைது நடவடிக்கை முழுக்கமுழுக்க அரசியல் பழிவாங்கும் செயல் என்றார்.

இதனிடையே மதன் மித்ரா கைதைக் கண்டித்து கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

சாரதா சிட்பண்ட் ஊழலில் என்னை தொடர்பு படுத்தி பேசும் பிரதமர் மோடி, சஹாரா நிறுவனத் தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளாரே.. அதற்காக அவரை கைது செய்யலாமா?

சஹாரா நிறுவனத் தலைவர். சுப்ரதாய், பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் நிரூபிக்கப்பட்டால் பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும். மதன் மித்ரா கைது செய்யப்பட்டதையடுத்து அந்த துறையை அவர் வரும் வரை நானே பார்த்துக்கொள்வேன்.

சாரதாசிட் பண்ட் ஊழல் குறித்து மம்தாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று இடது சாரிகளும், பாஜகவினரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal chief minister Mamata Banerjee on Friday threw an "open challenge" to Prime Minister Narendra Modi and the BJP to arrest her following the arrest of minister Madan Mitra in connection with the Saradha chit fund scandal, a situation she likened to the emergency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X