தன் கையால் சாப்பாட்டை எடுத்து பரிமாறிய மம்தா.. அக்கா, தாயாக மாறிய தருணம்
அரசியல் கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி சாப்பாடு பரிமாறினார்.
Recommended Video

கொல்கத்தா: வழக்கம்போல் கொண்டை, எளிமையான வெள்ளை புடவை.. கையில் தட்டுடன் சாப்பாடு பரிமாறும் மம்தா பானர்ஜி போட்டோதான் இணையத்தை கலக்கி வருகிறது.
இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளிலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு அதிரடிக்கு பெயர் போனவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான். பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, இவருக்கு எல்லாமே ஒன்றுதான்.
அரசியலில் எந்த ஒரு அடியை எடுத்து வைத்தாலும் அது சரியான விகிதத்தில், அடுத்தவர் அலறி துடிக்கும் அளவுக்கு நுட்பமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு கலாப்பிரியை. இசை ரசிகை. விளையாட்டு ஆர்வம் நிறைந்தவர். இது எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாவனரும்கூட.

கவரும் எளிமை
இத்தனை திறமைகள் இருந்தாலும் மம்தாவிடம் அனைவருமே பார்த்து ஆச்சரியப்படுவது அவரது எளிமைதான். மம்தா என்றதும் நினைவுக்கு வருவது அவரது கொண்டையும், வெள்ளை உடையும்தான். சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற கல்யாணத்தில் உலக பணக்காரர்கள் முதல் உள்ளூர் தொழிலதிபர்கள் வரை கலந்து கொண்டு அசத்தினாலும், அதே எளிமையுடன் மம்தா பானர்ஜி கல்யாண வீட்டுக்குள் நுழைந்ததை எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.

ஹேஷ்டேக்
2 நாட்களுக்கு முன்பு அவர் ஒரு மாநாட்டை நடத்தி, அதில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு தன் கையாலேயே சாப்பாடு பரிமாறிய போட்டோதான் இப்போது ஹாட் டாபிக்!! இந்த போட்டோ சமீபத்தில் ட்ரெண்டிங் ஹேஷ்டேக்குகளில் பிரதான இடத்தையும் பிடித்திருக்கிறது.

சாப்பாடு தட்டு
ஒரு பெரிய ஹாலில் தேஜஸ்வி யாதவ், ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, என எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் வரிசையாக சேரில் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அறையில் ஒரு டைனிங் டேபிள் கூட இல்லை. எல்லார் கையிலும் உணவு பரிமாறப்பட்ட சாப்பாட்டு தட்டு இருக்கிறது. சேரில் உட்கார்ந்தபடியே கையில் தட்டு வைத்துகொண்டு அனைவரும் சாப்பிடுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின்
தன் கையில் ஒரு தட்டை வைத்து கொண்டு, அதிலிருந்து அனைவருக்கும் ஒரு கரண்டியால் சாப்பாடு பரிமாறுகிறார் மம்தா. இதனை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, உட்பட நம்ம ஸ்டாலின் வரை வாங்கி ருசித்து சாப்பிடுகிறார்கள்.
|
இது மம்தா ஸ்டைல்
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அரசியல் ஆலோசகர் சஞ்சய் யாதவ், ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜி, புன்னகையுடன் பட்டியல் இன மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஹர்திக் படேலுக்கு பரிமாறுகிறார். தாம் அழைத்த விருந்தாளிகள் என்றால் விருந்து வைப்பது தலைவர்கள் பாணி. ஆனால் விருந்தில் தாமே நின்று சாப்பாடு போடுவதுதான் மம்தாவின் ஸ்டைல்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications