திடீர் என குவிந்த ராணுவம்: தலைமைச் செயலகத்தில் மமதா விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சுங்கச்சாவடிகளில் ராணுவத்தார் குவிக்கப்பட்டதை கண்டித்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி விடிய விடிய தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகமான நபானா அருகே உள்ள சுங்கச்சாவடி உள்பட மாநிலத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நேற்று ராணுவத்தார் குவிக்கப்பட்டனர்.

Mamata Banerjee Stays Put Despite Army Withdrawal From Toll Plaza

இதை கண்டித்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இரவு 10 மணிக்கும், பின்னர் அதிகாலை 2 மணிக்கும் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மாநில அரசின் அனுமதி இல்லாமல் ராணுவம் வந்துள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல். இங்கு என்ன ராணுவ புரட்சி நடக்கிறதா? இரவு 2 மணிக்கு மேல் தான் ராணுவத்தார் கிளம்பிச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். அவர்கள் பல மாவட்டங்களில் புகுந்துள்ளனர்.

வழக்கமான ராணுவ பயிற்சி என்றால் அது ஏன் என் மாநிலத்தில் மட்டும் நடக்கிறது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் தெரிவித்து குடியரசு தலைவரை விரைவில் சந்திப்பேன் என்றார்.

இது வழக்கமான பயிற்சி என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த பயிற்சிக்கு அனுமதி மறுத்ததாக மேற்கு வங்க மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In a dramatic turn of events, West Bengal Chief Minister Mamata Banerjee vowed to stay put at the secretariat despite the withdrawal of soldiers from a toll gate close to it early Friday.
Please Wait while comments are loading...