"SIRஐ வைத்து விளையாட முடியாது.. நாட்டையே உலுக்கிவிடுவேன்.." பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா: தேர்தல் கமிஷன் இப்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சார் எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு தன்னை காலி செய்ய நினைத்தால் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார்.
பீகார் தேர்தலுக்கு முன்பு அங்கு SIR எனப்படும் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த சார் பணிகளைத் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மம்தா
இதற்கிடையே மேற்கு வங்கத்தின் போன்கானில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிரான பேரணியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா, சார் பணிகள் தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். சார் பணிகளை வைத்து உண்மையான வாக்காளர்கள் யாரையும் நீக்கக்கூடாது என்றும் பீகாரில் பாஜக தேர்தலின் போது சார் பணிகள் மூலம் விளையாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், மேற்கு வங்கத்தில் இதுபோல் நடக்காது என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
நாட்டையே உலுக்கிவிடுவேன்
மேற்கு வங்கத்தில் தன்னையோ அல்லது தனது மக்களையும் குறிவைத்து பாஜக செயல்பட்டால், நாடு முழுவதும் வீதியில் இறங்கி முழு தேசத்தையும் உலுக்கிவிடுவேன் என்று மம்தா எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நீங்கள் மேற்கு வங்கத்தில் என் மீதோ அல்லது என் மக்கல் மீதோ குறிவைத்துத் தாக்குதலை நடத்தினால்.. நான் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்குவேன். தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் பயணிப்பேன். மக்களைச் சந்தித்துச் சிக்கல்களை விளக்குவேன்.
தகுதியான வாக்காளர் ஒருவருடைய பெயரையும் நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. மக்கள் பயப்பட வேண்டாம். உண்மையில் சார் பணிகளை நடத்தி முடிக்க 3 ஆண்டுகள் ஆகும். கடைசியாக 2002இல் இதை நடத்தினர். நாங்கள் அதை அப்போது எதிர்க்கவே இல்லை. ஆனால், இப்போது உண்மையான வாக்காளர்களை பாஜக நீக்க முயல்கிறது. வாக்காளர் பட்டியலை பாஜக தங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து திருத்துகிறது. தேர்தல் ஆணையம் அதற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வேலை நடுநிலையாக இருப்பதுதான், பாஜகவின் கமிஷனாக இருப்பது இல்லை.
பாஜகவால் வெல்ல முடியாது
பாஜகவால் என்னுடன் நேரடியாக மோதி வெல்ல முடியாது. நான் மேற்கு வங்க வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் தான் என்னை இப்படி காலி செய்ய பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது" என்றார்.
தொடர்ந்து சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிப் பேசிய அவர், "இப்போது தேர்தல்கள் நெருங்கி வருவதால், அவர்கள் திடீரென சிஏஏ பற்றிப் பேசுகிறார்கள். மதத்தின் அடிப்படையில் படிவங்களை விநியோகிக்கிறார்கள்.. சமூக வலைத்தளங்களில் இருக்கும் தகவல்களைப் பார்த்து சிஏஏவுக்கு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். இதனால் உங்கள் வாக்குரிமை கூட பறிபோகலாம்.. யோசித்துச் செயல்படுங்கள்" என்றார்.
தர்மம் vs அதர்மம்
அரசியலமைப்பையும் மேற்கோள் காட்டி பேசிய மம்தா, "அம்பேத்கர் கஷ்டப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கினார் என்பதை மறந்துவிடாதீர்கள். நமது அரசியலமைப்பு அனைத்து மதங்களிடையேயும் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.. ஆனால், பாஜக மக்களைத் துன்புறுத்துகிறது. தர்மம் எனச் சொல்லி அதர்மத்தைச் செய்கிறார்கள்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications