மேற்கு வங்கத்தை 3ஆக பிரிக்க பாஜக சதி!" புயலை கிளப்பிய மம்தா.. டெல்லி போடும் ரகசிய கணக்கு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை பாஜக மூன்றாகப் பிரிக்கப் பார்ப்பதாகவும் ஒடிசா மற்றும் பீகார் உடன் சில மாவட்டங்களை இணைக்கப் பார்ப்பதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுகள் தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் களத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் இரு கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கிறது. இதற்கிடையே பாஜக மீது மம்தா சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தின் பாங்குராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவைக் காட்டமாக விமர்சித்தார். அவர் அங்குப் பேசுகையில், "பாஜக ஒரு புதிய தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்கப் போகிறார்கள்.. மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களை அண்டை மாநிலங்களான பீகார் அல்லது ஒடிசாவுடன் இணைக்கப் பாஜக துடிக்கிறது.. அங்கிருக்கும் வங்காளிகளை அவர்கள் குறிவைப்பார்கள்” என்றார்.
மிரட்டல்
மேலும், தேர்தல் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் கைது செய்து, கட்சியை முடக்கப் பாஜக சதி செய்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், மேற்கு வங்க மக்களைக் காப்பாற்றத் தான் தனி ஆளாகப் போராடி வருவதாகவும் இந்த கைதுகளைப் பார்த்து எல்லாம் அஞ்சப்போவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை
மம்தா குறிப்பிடும் இந்த தொகுதி மறுவரையறை தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2023-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்) என்பது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகுதான் அமலுக்கு வரும். அதன் பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்தான் 2034ல் பெண்கள் 33% இடங்களைப் பெற முடியும்.
ஆனால், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பே இதை அமல்படுத்த பாஜக சில சட்டத் திருத்தங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வையும் கூட்ட உள்ளது.. இந்தத் தொகுதி மறுவரையறை மூலம் மேற்கு வங்கம் பிரிக்கப்படும் என்பது மம்தாவின் அச்சம்.
பாஜக தலைவர்கள்
அதேநேரம் மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டு திடீரென உருவானதும் அல்ல. கடந்த காலங்களில் பாஜக தலைவர்கள் பேசிய சில விஷயங்கள் மம்தாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளது. அதாவது கடந்த 2024ல் அப்போது பாஜக மேற்கு வங்க மாநில தலைவராக இருந்த சுகந்தா மஜும்தார், மேற்கு வங்கத்தின் 8 வடக்கு மாவட்டங்களை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்க வேண்டும் எனப் பிரதமர் அலுவலகத்திற்குப் பரிந்துரை அனுப்பியிருந்தார்.
அதேபோல பாஜகவின் எம்பி நிஷிகாந்த் துபே, ஊடுருவலைத் தடுக்க மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களை ஒரு 'யூனியன் பிரதேசமாக' மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதை எல்லாம் வைத்தே மம்தா இப்போது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மாநிலத்தைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என மம்தா கிளப்பும் சென்டிமென்ட் அரசியல் குற்றச்சாட்டை மேற்கு வங்க மக்கள் நம்புவார்களா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications