For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பேரணியில் பங்கேற்றதால் கணவர் முத்தலாக் கூறிவிட்டார்: இளம்பெண் கண்ணீர்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மோடியின் பேரணியில் கலந்து கொண்டதால் ஒருவர் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஃபைரா. அவர் தனிஷ் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

Man gives triple talaq to wife for attending Modi's rally in UP

இந்நிலையில் முத்தலாக் முறையை ரத்து செய்ய சட்டம் கொண்டு வந்த மத்திய அரசின் திடட்த்தை பாராட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி நடைபெற்றது.

அந்த பேரணியில் ஃபைரா கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். மோடியின் பேரணிக்கு சென்றதால் தனிஷ் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார்.

இது குறித்து ஃபைரா கூறியதாவது,

என் கணவருக்கும், அவரின் உறவுக்கார பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். என்னை விவாகரத்து செய்யப் போவதாக சொல்லிக் கொண்டே இருந்தார். இந்நிலையில் பேரணிக்கு சென்று வந்தபோது என்னிடம மூன்று முறை தலாக் கூறினார். என்னையும், மகனையும் அடித்து வீட்டை விட்டு விரட்டினார் என்றார்.

தனிஷ் கூறியதாவது,

நான் முத்தலாக் சொல்லவில்லை. அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்தேன். அவள் மாமா என்னை மிரட்டிக் கொண்டே இருந்தார். அவள் ஜீன்ஸ் அணிந்தாள். என் மனைவியை என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கும் மோடிஜியின் பேரணிக்கும் தொடர்பு இல்லை என்றார்.

English summary
A woman named Faira said that her husband gave her triple talaq for attending Modi's rally in Uttar Pradesh. She even accused her husband of having extra marital affairs with his aunt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X