Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக் அணிந்து.. கோட் சூட் போட்டு.. தாட் பூட் காம வேட்டை.. கடைசியில் களி தின்ன வச்சுட்டாங்களே!

500 பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

கர்னூல்: மண்டை முழுசும் வழுக்கை.. அதனால விக் வச்சுக்கிட்டு பெண்களை ஏமாற்ற கிளம்பினார் ஒருத்தர்.. கடைசியில, இப்போ களி தின்ன வச்சிட்டாங்க போலீசார்!!

கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்தான் அவர். வயசு 33. அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியான சமூக வலைதளங்களை தன் காம இச்சைக்கு ரொம்பவே யூஸ் பண்ணிக்கிட்டாரு ராஜ்குமார்!!

 கோட்-சூட்

கோட்-சூட்

தனது பேஸ்புக்கில் தான் காதல் லீலைகளை ஆரம்பித்தார் ராஜ்குமார். மண்டை என்னவோ வழுக்கைதான். அதை இளம் பெண்களிடம் காட்ட முடியாதே. அதனால ஒரு விக் ரெடி பண்ணி போட்டுக்கிட்டார். கோட், சூட் அணிந்து டிப்-டாப் கெட் அப்பை ஒருவழியா கொண்டுவந்துட்டார் ராஜ்குமார்.

[ டேய் பக் குட்டிப் பையா.. தண்ணி இங்க விழுதுடா இதை குடிடா! ]

 ஏமாற தொடங்கினர்

ஏமாற தொடங்கினர்

அப்பறம் டிசைன் டிசைனா போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டுக்கிட்டார். எப்பவுமே இளமை போலவும், ஹான்ட்ஸம் போலவும் பேஸ்புக் பெண்களிடம் காட்டிக்கிட்டார். ஏமாறவங்க இருக்கிறவரையில ஏமாத்துவறவங்க இருக்கத்தானே செய்வாங்க. ஒவ்வொரு பெண்ணாக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.

 பெரிய புள்ளிகளின் பெண்கள்

பெரிய புள்ளிகளின் பெண்கள்

காதல் வலையை ராஜ்குமார் பெரிசாவே வீசியிருப்பார் போல. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் ராஜ்குமார். இந்தமோசடியில் ஆந்திராவின் பெரிய பணக்கார வீட்டு பெண்களிலிருந்து, உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை அடக்கமாம். ஒரு துறையையும் விட்டு வைக்கவில்லை.

 வாழ்வை நாசாமாக்கினார்

வாழ்வை நாசாமாக்கினார்

எல்லா பக்கமும் வலையை வீசி பெண்களை தன் பக்கம் இழுத்துள்ளார் ராஜ்குமார். கடைசியில் இந்த விவகாரம் கர்னூல் போலீசுக்கு போனபிறகுதான் வழுக்கை மண்டை, விக், கோட், சூட், 500 இளம்பெண்கள்.... என்ற விவரங்கள் எல்லாமே வெளிவந்திருக்கிறது. பேஸ்புக்கில் மெதுவாக பேச்சு கொடுத்து அந்த பெண்களை "கவர்" செய்துவிட்டு, பிறகு நேரில் சந்தித்து அவர்களை பாழாக்குவதுதான் இவரது ஒரே ஹாபி.

 மிரட்டல் புகைப்படங்கள்

மிரட்டல் புகைப்படங்கள்

பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களில் அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமும் ராஜ்குமாருக்கு இருக்கிறது. நெருங்கி பழகிய பிறகு அவர்களிடம் பணம் கறக்க ஆரம்பிப்பது அடுத்த பழக்கமாம். பணம், நகை கிடைத்தால் ஆச்சு, இல்லையென்றால் நெருக்கமாக இருக்கும் படத்தை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி அந்த பெண்ணின் மானத்தையே வாங்கிவிடுவது அடுத்த பழக்கமாம்.

தற்கொலை

தற்கொலை

இப்படித்தான் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் ராஜ்குமார் கேட்ட பணத்தை தர முடியவில்லை போலும். அதனால் வழக்கம்போல் எடுத்து வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில் அனுப்பி வைத்து வைரலாக்கி விட்டார் ராஜ்குமார். இந்த விஷயம் பெண்ணின் அப்பாவுக்கு தெரியவர, கடைசியில் அவர் தற்கொலையே செய்து கொண்டார்!! இதனால் கடந்த 2016-ம் ஆண்டில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

 கம்பி எண்ணும் ஹீரோ

கம்பி எண்ணும் ஹீரோ

ஆனாலும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் இதே பாணியில்தான் இறங்கினார். இருந்தாலும் சும்மா விடுமா போலீஸ்!! தற்போது மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இப்போது கோட், சூட் இல்லாமல், முக்கியமாக விக் இல்லாமல் வழுக்கை தலையுடன் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் ராஜ்குமார்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+