நடுவானில் கதவை திறந்த விமான பயணி.. சக பயணிகள் அடி, உதை.. டோணி ஊர்க்காரர் செய்த வேலையை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: விமானம் தரையிறங்குவதற்குள் கதவை திறக்க ஒருவர் கதவை திறக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை சேர்ந்தவர் அஃப்தாப் அகமது (32). அவர் டெல்லியிலிருந்து ராஞ்சி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அப்போது விமானம் தரையிறங்க தயாரானது.

இந் நிலையில் வின்வெளியில் விமானம் இருந்தபோதே அவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை தடுக்க முயற்சித்தனர். அப்போது பயணிகளுக்கும், அகமதுவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

 போலீஸில் ஒப்படைப்பு

போலீஸில் ஒப்படைப்பு

இதனால் பயணிகளும், அகமதுவும் காயமடைந்தனர். இந்த போராட்டத்துக்கு பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த நபர் ராஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 ஒழுங்கீன செயல்கள்

ஒழுங்கீன செயல்கள்

விமான பயணிகள் இதுபோன்று ஒழுங்கீனமான செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் துபாயிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை விமான இருக்கையில் கட்டிவைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டார்.

 நடுவானில் கதவு திறப்பு

நடுவானில் கதவு திறப்பு

கடந்த மே மாதம் டெல்லி வந்த விமானத்தில் பயணித்த ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயற்சித்தார். இதுபோன்ற சம்பவங்களால் விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்படுகிறது.

 விமான ஊழியர்கள் கவலை

விமான ஊழியர்கள் கவலை

விமானத்தில் பயணம் செய்ய வரும் போது நன்றாக டீசென்ட்டாக உள்ள மக்களும் இதுபோல் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்கள் என்றாலே சற்று பயத்துடன் பயணம் செய்யும் நிலையில் இதுபோன்று நடுவானில் கதவு திறப்பது, ஜன்னல் திறப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஒரு சில பயணிகள் ஏற்படுவது மற்ற பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என்று விமான ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man tried to force open the emergency door of a flight before it could land at Ranchi airport on Monday night. He had boarded the AirAsia flight from Delhi.
Please Wait while comments are loading...