மாணவிகள் டாய்லெட்டில் ரகசிய செல்போன்: மங்களூர் பல்கலை. மாணவர் கைது
மங்களூரு: மங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மாணவிகளின் கழிவறையில் செல்போனை வைத்து ரகசியமாக வீடியோ எடுத்து போலீசில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சந்தோஷ்(22). தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள சுல்லியாவை சேர்ந்தவர். அவருக்கும், சக மாணவிக்கும் இடையே விவாதம் நடந்தது.

பையன்கள் கிழிந்த உள்ளாடைகளை அணிவார்கள், பெண்கள் நல்ல உள்ளாடைகளை அணிவார்கள் என்று அந்த மாணவி கூறியிருக்கிறார். இதை மறுத்த சந்தோஷை தனது நிலையை நிரூபிக்குமாறு மாணவி சவால் விட்டிருக்கிறார்.
சவாலை ஏற்றுக் கொண்ட சந்தோஷ் அருகில் உள்ள மாலில் இருந்து பவர் பேங்க் மற்றும் செல்போனை வாங்கினார். பல்கலைக்கழகத்தில் பயோ சயன்ஸ் துறையில் தான் பாதுகாப்பு குறைவு என்பதை உளவு பார்த்து தெரிந்து கொண்ட சந்தோஷ் அதிகாலையில் அங்கு சென்று மாணவிகளின் கழிவறையில் செல்போனை வைத்து வீடியோ ரெக்கார்டிங்கை ஆன் செய்து வைத்துவிட்டார்.
கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்த மாணவிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்தனர்.
சந்தோஷ் கேமரா ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை பார்க்க செல்போன் வாங்கிய கையோடு அந்த கடையை புகைப்படம் எடுத்து அதை அழிக்க மறந்துவிட்டார். அந்த புகைப்படத்தால் தான் போலீசில் சிக்கினார்.
செல்போனை கழிவறையில் வைத்த பிறகு சந்தோஷ் பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் பெங்களூரில் காவிரி விவகாரம் தொடர்பாக பிரச்சனையாக இருந்ததால் அவரால் டெல்லி செல்ல முடியவில்லை.
சந்தோஷ் பள்ளி காலத்தில் இருந்து அனைத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளார். ஒரு மாணவியிடம் சவால் விட்டு தனது வாழ்க்கையை கெடுத்துக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications