For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் இடம் பிடித்த மங்கள்யான்!

நாடு முழுவதும் பழைய 500 ,1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று புது 500, 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட உள்ளன. புது 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் மங்கள்யான் புகைப்படம் இடம் பெற்றுள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புது 2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் மங்கல்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அந்த புகைப்படத்தை அச்சிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் செயற்கைக் கோள் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் செலுத்த‌ப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
கிட்டத்தட்ட 10 மாதங்கள் நீண்ட பயணம் மேற்கொண்ட மங்கள் யான் விண்கலம் கடந்த 2014ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

Mangalyan finds place in News Rs 2000 currency

மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மங்கள்யான் செயற்கைக்கோளினை எதிர்கால தலைமுறையினர் நினைவில் கொள்ளும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புத்தம் புது 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு வெளியிட்ட 2 ரூபாய் நோட்டில் செயற்கைக் கோள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் நாட்டின் தேசிய விலங்கான புலி இடம் பெற்றிருந்தது. 5 ருபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்ட உடன் பசுமை புரட்சியைக் குறிப்பிடும் வகையில் டிராக்டரில் விவசாயி உழுவது போன்ற படம் இடம் பெற்றிருக்கும்.

50 ரூபாய் நோட்டுக்களில் நாடாளுமன்றம் அச்சிடப்பட்டது. 100 ரூபாய் நோட்டுக்களில் இமயமலைப் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இப்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை படம் இடம் பெற்றுள்ளது.

புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப் படுத்தும் வகையில் அந்த புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மங்கள்யானைப் போல இந்திய பொருளாதாரம் உச்சத்திற்கு செல்லுமா பார்க்கலாம்.

English summary
Mangalyan spaceship has found a place in newly introduced Rs 2000 currency note.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X