Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறாத மணிப்பூர்! பழங்குடி வாலிபரின் தலையை துண்டித்து ஊர்வலம் போன பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் தலையை வெட்டி ஊர்வலமாக பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் எடுத்து சென்ற போட்டோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு அங்கு வசிக்கும் குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Manipur BJP MLA Shanti Kumars security guard accused of beheading Kuki man David Thiek

இந்த மோதல் வன்முறையாக வெடித்து தொடர்ந்து வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. இதில் 150 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதற்கிடையே தான் கடந்த மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் கும்பல் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்கிடையே தான் இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. மணிப்பூரில் உள்ள பிஷ்னுபூர் மாவட்த்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த டேவிட் தீக் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 2ம் தேதி இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தலை மூங்கில் வேலியில் ரத்தம் சொட்ட சொட்ட வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ மணிப்பூரில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் தான் டேவிட் தீக்கின் தலையை துண்டித்து கையில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றது பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதுதொடர்பான போட்டோவும் வெளியாகி உள்ளது.

அதாவது அந்த போட்டோவில் இருப்பவர் பாஜக எம்எல்ஏவின் பாதுகாவலர் என கூறப்படுகிறது. அதாவது மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கும்பி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சாந்தி குமார் என்ற சனிசம் பிரேம்சந்திர சிங். இவரிடம் மைரெம்பம் ரொமேஷ் மங்காங் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் தான் டேவிட் தீக்கின் தலையை கையில் எடுத்து செல்லும் போட்டோ வெளியாகி உள்ளது. அதில் மைரெம்பம் ரொமேஷ் மங்காங் ஒரு கையில் அரிவாள் வைத்திருக்கும் நிலையில் இன்னொரு கையில் டேவிட் தீக்கின் தலையை வைத்துள்ளார். இதனால் டேவிட் தீக்கின் தலையை துண்டித்து பாஜக எம்எல்ஏவான சாந்தி குமாரின் பாதுகாவலர் மைரெம்பம் ரொமேஷ் மங்காங் தான் கொலை செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+