மணிப்பூர் வன்முறை: தீவிரம் அடைகிறது சிபிஐ விசாரணை.. 53 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமனம்
இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை சிபிஐ நியமனம் செய்துள்ளது. இந்தக் குழுவில் டிஐஜி ரேங்கில் உள்ள இரண்டு பெண் அதிகாரிகள் உள்பட 29 பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். மலைப்பகுதிகள் நிறைந்த மணிப்பூரில், பெரும்பான்மையாக மெய்தி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். இதனால், மணிப்பூரில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கியது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு இதுகுறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அங்கு விரைவில் அமைதி திரும்பும் என்றார்.
இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட குழுவை சிபிஐ அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 29 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் இருவர் டிஐஜி ரேங்கில் உள்ள அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளை ஏற்கனவே சிபிஐ விசாரித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications