For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடுமையான நிலநடுக்கம்- ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 2 பேர் படுகாயம்; வடமாநிலங்களிலும் அதிர்வு!!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்/ டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் ஒன்றின் பதுங்கு குழி இடிந்து விழுந்ததில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் டெல்லி உட்பட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்படது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அதிர்ந்தது.

ஆப்கானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 7.5 அலகுகள் பதிவாகி இருந்தன.

இந்நிலநடுக்கத்தால் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீநகர் அருகே ராணுவ முகாம் ஒன்றில் பதுங்கு குழி இடிந்து விழுந்து 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலநடுக்க அதிர்வுகள் டெல்லி, சண்டிகர், சிம்லா உள்ளிட்ட வட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின் இயக்கப்பட்டன.

பல லட்சம் பேரை பலி கொண்ட இந்துகுஷ் மலைப்பகுதியின் பயங்கர நிலநடுக்கங்கள்..

English summary
Massive earthquake centered Hindukush range hit Srinagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X