107 பேரின் உயிரை குடித்த கேரளா கோவில் தீ விபத்து: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
டெல்லி: கேரள மாநிலத்தில் உள்ள பரவூரில் இருக்கும் புட்டிங்கல் தேவி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. காலை 3.30 மணி அளவில் பட்டாசு வெடிக்கையில் தீப்பொறி பறந்து சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொட்டலங்களில் பட பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் கோவில் வளாகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 107 பேர் பலியாகியுள்ளனர், 350 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்துள்ளவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கொல்லம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து என் இதயத்தை உலுக்கிவிட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பலியானவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
Fire at temple in Kollam is heart-rending & shocking beyond words. My thoughts are with families of the deceased & prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) 10 April 2016
Spoke to CM Oommen Chandy about the fire at a temple in Kollam. Arranging for immediate shifting of those critically injured via helicopter.
— Narendra Modi (@narendramodi) 10 April 2016
முதல்வர் உம்மன் சாண்டியிடம் கோவில் தீ விபத்து குறித்து பேசினேன். படுகாயம் அடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Have also asked my Cabinet colleague & Health Minister @JPNadda to immediately reach the site of the fire tragedy in Kollam.
— Narendra Modi (@narendramodi) 10 April 2016
I will be reaching Kerala soon to take stock of the situation arising due to the unfortunate fire tragedy in Kollam.
— Narendra Modi (@narendramodi) 10 April 2016
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை உடனே கொல்லம் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நான் விரைவில் கேரளா சென்று நிலைமையை நேரில் பார்வையிட உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Heartfelt condolences on loss of lives in Kerala temple fire #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) April 10, 2016
Urge State Govt.& other agencies to provide all help to bereaved families & medical assistance to the Injured #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) April 10, 2016
கேரளா கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவியும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய மருத்துவ உதவியும் அளிக்க மாநில அரசு மற்றும் பிற ஏஜென்சிகளை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி











Click it and Unblock the Notifications