ரசிகர்களைத் திட்டிய மெகா ஸ்டார்...இணையத்தில் வைரலாகிறது வீடியோ
ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் சிரஞ்சீவி தனது ரசிகர் ஒருவரை முட்டாள் என்று திட்டிய வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இளம்நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் புரூஸ்லி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராம் சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
விழா முடிந்து காரில் ஏறுவதற்காக சிரஞ்சீவி வந்தபோது அவரை அருகில் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர் ஒருவர் நெருக்கமாக வந்துவிட, கோபத்தில் சிரஞ்சீவியின் முகம் சிவந்து விட்டது.
"ஒவ்வொருமுறையும் இப்படித் தான் செய்கிறீர்கள் எத்தனை முறை சொல்வது" என்று அந்த ரசிகரைப் பார்த்து கேட்ட சிரஞ்சீவி இறுதியாக முட்டாள் என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு காரில் ஏறி சென்றிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. போதாதற்கு சிரஞ்சீவி தெலுங்கில் திட்டியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இணையங்களில் பரப்பி வருகின்றனர்.
தனது 150 வது படத்தில் விரைவில் நடிக்கவிருக்கும் சிரஞ்சீவி, புரூஸ்லீ படத்தில் 15 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications