அவர் துரோகம் செய்துவிட்டார்.. எங்களுடன் நின்றதற்கு நன்றி ஸ்டாலின்.. உருகிய மெகபூபா முப்தி!

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையில் இதற்கு எதிராக பேசினார்கள். தற்போது லோக்சபாவில் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது.

என்ன மசோதா

என்ன மசோதா

இந்த மசோதாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். நேற்று இதுகுறித்து சென்னையில் பேட்டி அளித்த ஸ்டாலின், ஜம்மு காஷ்மீரை பிரிப்பது கண்டனத்துக்குரியது. 370-வது பிரிவு நீக்கம் மக்களுக்கு எதிரானது. அம்மாநில மக்களை கேட்காமல் நாம் இது போன்ற பெரிய முடிவை எடுக்க கூடாது. அம்மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் இது. இன்று ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.

என்ன காஷ்மீர்

என்ன காஷ்மீர்

முதலில் காஷ்மீரில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும். அங்கு தேர்தல் நடத்தி சட்டசபையை கூட்ட வேண்டும். அவர்கள் மாநில எம்எல்ஏக்கள்தான் இந்த சட்டம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதை நீக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நன்றி

இந்த நிலையில் தற்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், மு. க ஸ்டாலினுக்கு மிக்க நன்றி, காஷ்மீர் மக்களுக்கு இந்த இக்கட்டான நிலையில் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

முப்தி என்ன சொன்னார்

மெகபூபா முப்தி செய்துள்ள இன்னொரு டிவிட்டில், பாஜக பெரும்பான்மையோடு வெற்றிபெற்றதை பார்த்த போது அவர் வாஜ்பாயை போல நேர்மையாக செயல்பட்டு, ஒரு ஸ்டேட்டஸ்மேன் நேர்மையான பாதையில் செல்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார், என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+