மக்களவையில் அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களவையில் தேவையில்லாத அமளி, துமளிகள் கூடாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்.பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக அவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டால் முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் . அப்படியும் நிலைமை சரியாகவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
மேலும், எம்.பி.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவதைத் தடுக்க தேவை ஏற்பட்டால் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications