ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு.. வயிற்றில் "பால்" வார்த்த மத்திய அமைச்சரவை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து பாலுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை செயலர் கூறியுள்ளார்.

தலைக்குப் பயன்படுத்தும் சிகை எண்ணெய், சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானிய வகைகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட மாட்டாது என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

Milk exempted from GST, 81% items taxed at 18 % , Announce central government

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் ஜெட்லி தலைமையில் நடைபெற்று வருகிறது. எந்தெந்தப் பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. அதன் பிறகே முழுமையான ஜிஎஸ்டி வரிவிதிப்புக் குறித்து விவரங்கள் தெரிய வரும் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Finance Minister Arun Jaitley said, Foodgrains will be cheaper from July 1 when the GST is rolled out.
Please Wait while comments are loading...