For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் காங். - பகுஜன் கூட்டணி அமைந்தால் பாஜகவுக்கு பின்னடைவு- இந்தியா டுடே சர்வே

By Mathi
|

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தால் பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்தியா டுடே-சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா டுடே -சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தனித்து நின்றால் காங்கிரஸ் 4 இடங்களையும் பாஜக 30 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் காங்கிரஸ்- பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தால் இஸ்லாமியர்கள் வாக்குகளை அப்படியே அள்ளிக் கொண்டு பாஜகவுக்கு கடும் வீழ்ச்சியை உருவாக்கும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு

காங்கிரஸுக்கு 22%

காங்கிரஸுக்கு 22%

காங்கிரஸ் கட்சிக்கு 2009 தேர்தலில் இஸ்லாமியர் வாக்குகள் 30% கிடைத்திருக்கிறது. இப்போது தேர்தல் நடைபெற்றால் அது தனித்துப் போட்டியிடும்போது 22% இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்கும்.

பாஜகவுக்கு 7%

பாஜகவுக்கு 7%

கடந்த தேர்தலில் 5% இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இம்முறை 7% கிடைக்குமாம்.

பகுஜனுக்கு 21%

பகுஜனுக்கு 21%

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 27% இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிட்டால் 21% வாக்குகள் கிடைக்குமாம்.

சமாஜ்வாடிக்கு 35%

சமாஜ்வாடிக்கு 35%

ஆனால் சமாஜ்வாடிக்கு கட்சிக்கு இப்போது தேர்தல் நடைபெற்றால் 35% இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்குமாம். கடந்த தேர்தலில் 28%தான் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்- பகுஜன் கூட்டணி அமைந்தால்..

காங்- பகுஜன் கூட்டணி அமைந்தால்..

ஆனால் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் உ.பி. நிலைமை தலைகீழாகுமாம். 80 தொகுதிகளில் காங்கிரஸ்- பகுஜன் கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றிவிடுமாம். இவை இரண்டும் தனித்துப் போட்டியிட்டால் பகுஜனுக்கு 24, காங்கிரஸ் கட்சிக்கு 4 தான் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

பாஜகவுக்கு சரிவு

பாஜகவுக்கு சரிவு

காங்கிரஸ்- பகுஜன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் பாரதிய ஜனதா கட்சியால் 25 இடங்களைத்தான் வெல்ல முடியுமாம். அந்த இரண்டு கட்சிகளும் தனித்து நின்றால்தான் 30 தொகுதிகளை பாஜக கைப்பற்ற முடியும் என்கிறது இந்தியா டுடே கணிப்பு.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி

காங்கிரஸ்- பகுஜன் கூட்டணி அமைந்தால் சமாஜ்வாடியும் பெரும் பின்னடைவை சந்திக்குமாம். மொத்தமே 14 இடங்கள்தான் அக்கட்சிக்கு கிடைக்குமாம். அதே காங்கிரஸ்- பகுஜன் தனித்து நின்றால் சமாஜ்வாடி 20 இடங்கள் கிடைக்குமாம்.

English summary
Another big highlight of the India Today Group-CVoter's exclusive survey deciphering the mood of the people of Uttar Pradesh is the extreme fragmentation of Muslim vote across the state. Even in the aftermath of Muzaffarnagar riots, the ruling Samajwadi Party is still projected to bag the lion's share of 35 per cent of minority vote, while Congress comes a distant second at 22 per cent and Mayawati's Bahujan Samaj Party a close third at 21 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X