For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிடைக்கிற கேப்பில் எல்லாம் செக் வைக்கும் மம்தா.. அடுத்த குறி மிதுனுக்கு விசாரணையில் குதித்த போலீஸ்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: வங்கத்தின் மண்ணின் மைந்தன் என்று மேற்கு வங்கத்தில் பாஜக கொண்டாடி வந்த மிதுன் சக்ரபோர்த்திக்கு மம்தா பானர்ஜி அரசு செக் வைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி பேசிய சில கருத்துக்களுக்காக போலீஸ் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் மத்திய அரசுடன் நேரடி மோதல், முகுல் ராயை மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வந்தது என்று மம்தா பானர்ஜி அடுத்தடுத்து சிக்ஸர் அடித்துக்கொண்டு இருக்கிறார்.

இன்னும் பல பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடிமுகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி

விசாரணை

விசாரணை

இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக பெரிதும் நம்ப கூடிய, வங்கத்தின் மண்ணின் மைந்தன் என்று அக்கட்சி கொண்டாட கூடிய மிதுன் சக்ரபோர்த்தியை மேற்கு வங்க போலீஸ் விசாரித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பேசிய சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு போலீஸ் அவரை இன்று ஆன்லைன் வீடியோ வழியாக விசாரித்தது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

பிரதமர் மோடியுடன் மிதுன் சக்ரபோர்த்தி கலந்து கொண்ட பிரச்சார கூட்டம் ஒன்றில், நான் உங்களை இங்கே அடித்தால்.. உங்களின் உதட்டில் நேராக சென்ற சுடுகாட்டில் விழும், என்று மிரட்டல் தொனியில் பேசி இருந்தார். இது மட்டுமின்றி இதேபோல் இன்னும் சில கருத்துக்களை மிரட்டல் தொனியில் மிதுன் பேசி இருந்தார். இதையடுத்து அவர் மீது கொல்கத்தா போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்தது.

விளக்கம்

விளக்கம்

இதையடுத்து விளக்கம் அளித்த மிதுன் சக்ரபோர்த்தி, நான் பேசியது நேரடியான பொருள் கொண்டது. இதை தவறாக பார்க்கிறார்கள். நான் நேரடி பொருளில் அந்த வாசகத்தை பேசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு தன் மீதான எப்ஐஆரை நீக்கும்படியும் கொல்கத்தா ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் கொல்கத்தா ஹைகோர்ட் இவர் மீதான எப்ஐஆரை நீக்க மறுத்துவிட்டு, இவரை விசாரணைக்கு ஒத்துழைக்க கூறியது.

வீடியோ

வீடியோ

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் மூலம் இன்று மிதுன் சக்ரபோர்த்தி விசாரணை செய்யப்பட்டார். 30 நிமிடத்திற்கும் மேலாக போலீசார் இவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு உள்ளனர். தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக இவர் விசாரணையில் குறிப்பிட்டதாக தெரிகிறது.

English summary
BJP Mithun Chakraborty grilled by Kolkata Police for his hate speech during the campaign in West Bengal Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X