தமிழக போலீஸ் எங்களை மிரட்டுகிறது.. கர்நாடக காவல்நிலையத்தில் செந்தில்பாலாஜி புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடகு: தமிழக போலீஸ் தங்களை மிரட்டுவதாக கர்நாடக காவல்நிலையத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி புகார் அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக போலீசார் அவர்களை மிரட்டுவதாக எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

MLA Senthil balaji complaints to Karnataka police against Tamil nadu police

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கக்கோரி 20 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக காவல்துறை மீது கர்நாடக காவல்நிலையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கக்கோரி தமிழக போலீஸ் தங்களை மிரட்டுவதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குடகு அருகே உள்ள சுண்டிக்கொப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLA Senthil balaji complaints to Karnataka police against Tamil nadu police. Senthil balaji accuses that Tamil nadu police threatening.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற