For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுளின் மொபைல்கெடான் தேர்வில் பல அரசு இணையதளங்கள் ஃபெயில்: 2 மட்டுமே பாஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: செல்போனில் எந்தெந்த இணையதளங்கள் செயல்படுகிறது என்று கூகுள் நிறுவனம் செய்த சோதனையில் மத்திய அரசு இணையதளங்கள் பல தோல்வி அடைந்துள்ளன.

கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றும், லேப்டாப் மூலமும் இணையதளங்களை பார்க்கும் காலம் மலையேறி வருகிறது. மக்கள் செல்போன் மூலமே செய்தி வாசிப்பது, தகவல்களை இணையதளங்களில் தேடுவது என்று உள்ளனர். இந்நிலையில் எந்தெந்த இணையதளங்கள் செல்போனில் நல்ல முறையில் செயல்படுகின்றன என்பதை கண்டறிய கூகுள் நிறுவனம் மொபைல்கெடான் என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.

கூகுள் வைத்த மொபைல்கெடான் சோதனையில் மத்திய அரசு இணையதளங்கள் பல தோல்வி அடைந்துள்ளன.

என்ஐசி

என்ஐசி

மத்திய அரசின் www.nic.in என்ற தகவல் மைய இணையதளம் கூகுள் சோதனையில் தோல்வி அடைந்துள்ளது. இந்த இணையதளத்தை செல்போனில் பார்க்க அசௌகரியமாக உள்ளது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

ஆன்லைனில் வருமான வரியை செலுத்துங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான இணையதளமான incometaxindiaefiling.gov.in-ஐ செல்போனில் பார்க்க முடியவில்லை.

ஓஜிபிஎல்

ஓஜிபிஎல்

தேசிய தகவல் மையம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பொது சேவை நிர்வாகம் சேர்ந்து உருவாக்கிய http://ogpl.gov.in/ என்ற இணையதளமும் செல்போனில் பார்க்க லாயக்கு இல்லை.

ரயில்வே

ரயில்வே

மக்கள் அடித்துப் பிடித்து அடிக்கடி செல்லும் ரயில்வே இணையதளமான http://irctc.co.in/ -ம் கூகுள் சோதனையில் தோற்றுள்ளது. ரயில்வே மொபைல்
அப்ளிகேஷன் எல்லாம் இருக்கையில் இணையதளத்தை செல்போனில் ஒழுங்காக பார்க்க முடியவில்லையே.

லோக்சபா

லோக்சபா

http://loksabha.gov.in/ என்ற லோக்சபா இணையதளமும் செல்போனில் பார்க்க லாயக்கு இல்லை என்கிறது கூகுள். இந்த இணையதளத்தில் லோக்சபா உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், நாடாளுமன்ற நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றிய தகவல் வெளியிடப்படுகிறது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

http://parliamentofindia.gov.in/ என்ற நாடாளுமன்ற இணையதளத்தை செல்போனில் பார்க்க முடியவில்லை. இந்த இணையதளமும் கூகுள் சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.

www.nkn.in

www.nkn.in

ரயில்வே, வருமான வரித்துறை ஆகியவற்றை போன்றே தேசிய அறிவு நெட்வொர்க் இணைதளமான www.nkn.in -ம் செல்போனில் பார்க்க லாயக்கு இல்லை.

டெண்டர்

டெண்டர்

அரசு, பொதுத் துறை டெண்டர்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படும் tenders.gov.in என்ற இணையதளமும் கூகுள் சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா

இந்தியா

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://india.gov.in/ செல்போனில் பார்க்க கச்சிதமாக உள்ளது. இதன் மூலம் கூகுளில் மொபைல்கெடான்
சோதனையில் தேறியுள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய மேக் இன் இந்தியா திட்டத்தின் இணையதளமான Makeinindia.com கூகுளின் மொபைல்கெடான் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது.

English summary
Eight government websites have failed Google's Mobilegeddon test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X