For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரபேல் விமானத்தின் உத்தேச தொகை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுவிட்டது.. மத்திய அரசு அறிக்கை

ரபேல் விமானம் வாங்கியது குறித்த உத்தேச தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் விமானம் வாங்கியது குறித்த உத்தேச தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசு பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுதக்காமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

MoD’s releases official statement on Rafale deal

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் வாங்க 80 மில்லியன் டாலர் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியில் உத்தேசமாக 214 (டாலர் )மில்லியனுக்கு ஒரு விமானம் என்று பேசி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான விலை 740 (டாலர்) மில்லியன் ஆகும்.

இதன் காரணமாக ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரபேல் பைட்டர் விமானம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது ராணுவ ரகசியம் இதையெல்லாம் வெளியிட முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது பெரிய பிரச்சனையாக மாறியது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ரபேல் விவகாரத்தில் எந்த விதமான ஊழலும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.

மேலும் சென்ற ஆட்சியில் நடந்த பேச்சுவார்த்தியின் தொடர்ச்சிதான் இது என்றும் கூறியுள்ளது. அதுபோல் இதன் உத்தேசம் தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

உத்தேச தொகை மட்டுமே கொடுக்கப்படும், ஒவ்வொரு விமானத்தின் தனி தொகை வெளியிட முடியாது அது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதை மட்டுமே வெளியிட முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

English summary
Rahul Gandhi alleges scam in Rafale Jet deal. Now MoD’s releases official statement on Rafale deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X