For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசவேஸ்வராவுக்கு மோடி, அமித் ஷா மரியாதை: லிங்காயத்து வாக்குகளை கவர்வதற்காகவா?

பஷவேஸ்வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்துவது லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    லிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துகொள்ளும் பாஜக - காங்கிரஸ்- வீடியோ

    பெங்களூர்: பஷவேஸ்வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்துவது லிங்காயத்துகளின் வாக்குகளை கவர்வதற்காகவே என்று கருதப்படுகிறது.

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மேத 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராகுல்காந்தியும் அமித்ஷாவும் போட்டிக போட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    Modi, Amitshah offer tributes to Basaveshwara for Lingayat votes?

    தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதிலுமுள்ள லிங்காயத்துகள், வீரசைவர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் மற்றும் பாஜக குறி வைத்து வருகின்றனர். கர்நாடகத்தில் லிங்காயத்துகள் தனி மதமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த பஷவேஸ்வராவின் பிறந்த நாளையொட்டி அமித்ஷா பெங்களூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்தார். அதுபோல் லண்டன் தேம்ஸ் நதியில் இருந்தபடியே நரேந்திர மோடி பஷவேஸ்வராவுக்கு மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில் பாஜக சிக்மக்ளூர் தொகுதி எம்பி ஷோபா கரன்ட்லஜே கூறுகையில் பஷவேஸ்வராவின் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவிப்பதற்கு லிங்காயத்துகளும், வீரசைவர்களும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். லிங்காயத்துக்களுக்கென தனி மத அடையாளம் அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பஷவேஸ்வரா ஜெயந்திக்கு மரியாதை கொடுப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த நிலையில் எல்லாரும் பஷவேஸ்வராவை சுற்றியே உள்ளதால் இவர்கள் அனைவரும் பெருவாரியாக உள்ள லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காகவே இதுபோன்று செய்வதாக கூறப்படுகிறது.

    English summary
    Amitshah tributes to Basaveshwara for his birth anniversary for lingayat votes?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X