For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணுக்கே "தெரியாமல்" போட்டோ எடுத்து.. வீடு கொடுத்ததாக பொய் வேறு.. சர்ச்சையான மத்திய அரசு விளம்பரம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை தப்பும் தவறான ஒரு விளம்பரத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தியது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறப் போகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

எப்படியாவது முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் வீட்டு வசதி திட்டம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம்

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி மேற்கு வங்க மாநில செய்தித் தாள்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தோடு வெளியான மத்திய அரசின் ஒரு விளம்பரம் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க கூடிய மத்திய அரசின் திட்டம் இது.

நாளிதழில் விளம்பரம்

நாளிதழில் விளம்பரம்

இந்த திட்டத்தின் வெற்றி பெற்றி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முன்னணி நாளிதழ்களில் பிப்ரவரி 25ஆம் தேதி ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. சுயசார்பு பாரதம்.. சுயசார்பு பெங்கால்.. என்று குறிப்பிடப்பட்டு 24 லட்சம் மக்கள் இதுவரை இந்த திட்டத்தால் வீடுகள் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் பெரிதாகவும்.. கூடவே இன்னொரு பெண் புகைப்படமும் இருந்தது. அந்தப்பெண் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வீடு பெற்றுள்ளது போல விளம்பரம் தோற்றமளித்தது.

யார் அந்த பெண் தெரியுமா

யார் அந்த பெண் தெரியுமா

ஆனால், இந்தியா டுடே ஊடகம், அந்தப் பெண் யார் என்பது பற்றிய ஆய்வு செய்த போது திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது. அவர் கொல்கத்தாவின் பவ்பஜார் பகுதியை சேர்ந்த லட்சுமிதேவி ஆகும். ஏழை கூலித் தொழிலாளி. அவரிடம் கேட்டபோது இந்த புகைப்படம் தன்னை கேட்டு எடுக்கப்படவில்லை. யார் எடுத்தார்கள், எப்போது எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

மிகச்சிறிய வாடகை வீடு

மிகச்சிறிய வாடகை வீடு

இதில் அடுத்த கொடுமை என்னவென்றால் விளம்பரத்தில் வெளியான அந்தப் பெண்ணுக்கு சொந்த வீடு கிடையாது. இருப்பது ஒரு வாடகை வீட்டில் . அதுவும் ஒரே ஒரு அறை கொண்ட மிகச் சிறிய வீடு. மாதம் 500 ரூபாய் வாடகை கொடுத்து அந்த வீட்டில் இவரும் குடும்பத்தாரும் தங்கியிருக்கிறார்கள் . இதுபற்றி அவர் கூறுகையில், குழந்தைகளை வீட்டுக்குள் படுக்க வைத்துவிட்டு நாங்கள் தெருவில் பிளாட்பாரம் மீது படுத்து தூங்கும் நிலைமையில் உள்ளோம் . எங்களுக்கு ஏது வீடு.. என்று அப்பாவியாய் கேட்டுள்ளார். அந்த வீட்டில் குளியலறை கூட கிடையாது என்பதுதான் கொடுமையின் உச்சம்.

தெரியாமல் எடுத்த போட்டோ

தெரியாமல் எடுத்த போட்டோ

"நாளிதழில் எனது படத்தை பார்த்ததும் எனக்கு பயமே வந்துவிட்டது .. எப்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உள்ளூர் திருவிழா ஒன்றின்போது நான் கழிவறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனது போட்டோவை யாரோ தெரியாமல் எடுத்து அதை விளம்பரத்தில் போட்டு சொந்தவீடு இருப்பது போலவும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் எனக்கு பலன் கிடைத்தது போலவும் விளம்பரமாக வெளியிட்டு உள்ளார்கள். ஆனால் என் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.." என்கிறார் ஆதங்கத்தோடு. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை நாளிதழில் பயன்படுத்தியது மட்டும் இல்லாமல், உண்மைக்கு மாறாக அரசு திட்டம் பற்றிய ஒரு தகவலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்ற சர்ச்சை மேற்குவங்கத்தில் எழுந்துள்ளது.

English summary
West Bengal assembly election 2021: In an advertisement in a few Kolkata newspapers, a photo of a woman was used along with prime minister Narendra Modi to showcase the success of the centre's Pradhanmantri aawas Yojana is false.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X