Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிச்சடி பிடிக்காதவங்களாம் இனி 'ஆன்டி இந்தியன்'? பிரதமருக்கு பிடிச்சது கிச்சடிதான் தெரியுமோ

இந்திய தேசிய உணவாக கிச்சடி அறிவிக்கப்பட்டதாக வந்த செய்தி பொய் என மறுக்கப்பட்டது. இதை அடுத்து பிரதமர் மோடியின் விருப்பமான உணவு கிச்சடிதான் என்று கூறப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    என்னங்க சொல்றீங்க.. "கிச்சடி" இந்தியாவின் தேசிய உணவா??- வீடியோ

    டெல்லி: டெல்லியில் நாளை தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன.

    மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கருத்தரங்கில் 4ம் தேதி நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

    ஆனால் கடைசியில் அப்படி வெளியான தகவல் பொய் என மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான உணவு கிச்சடிதான் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் எங்கு சென்றாலும் கிச்சடிதான் சாப்பிடுவார் என்று கூறப்படுகிறது.

     டெல்லியில் நடக்கும்

    டெல்லியில் நடக்கும்

    டெல்லியில் நாளை தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த உணவு திருவிழாவில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பிரதிநிதியாக ஒரு உணவுப் பொருள் சமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உணவுகள் அந்த நாட்டின் தேசிய உணவு ஆகும். இதில் இந்தியாவில் இருந்து கிச்சடி சமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

     கிச்சடி தேசிய உணவா

    கிச்சடி தேசிய உணவா

    இதையடுத்து இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது. அதன்படி எல்லா நாடுகளும் அவர்கள் தேசிய உணவை சமைக்க இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்து கிச்சடி சமைக்கப்பட்ட இருக்கிறது. எனவே கிச்சடிதான் நமது தேசிய உணவு என்று கூறப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அந்த கருத்தரங்கில் 4ம் தேதி நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த செய்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் எழுதத்தொடங்கினர். ஒரே நாளில் கிச்சடி வைரல் ஆனது.

     குஜராத் உணவு

    குஜராத் உணவு

    இந்த நிலையில் குஜராத்துக்கு கிச்சடிக்கும் இருக்கும் உறவு வெளியாகி இருக்கிறது. கிச்சடி குஜராத்தில் இருக்கும் இந்துக்களால் அடிக்கடி சமைக்கப்படும் உணவு ஆகும். மேலும் விரதம் இருக்கும் சமயங்களில் அங்கு இருக்கும் மக்கள் கிச்சடி மட்டும் சாப்பிட அனுமதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குஜராத்தில் வாழும் மக்களின் பிரதான உணவுப் பொருளில் கிச்சடியும் இடம் பெற்று இருக்கும். மேலும் கிச்சடி உருவான இடம் குஜராத்தான் எனவும் சிலரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. குஜராத் மக்கள் கிச்சடியில் பல வகைகளை தினமும் செய்வார்களாம்.

    மோடி விரும்பி உண்ணும் உணவு

    அதேபோல் இந்த கிச்சடி விவகாரத்தில் தற்போது மிகவும் முக்கியமான தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் மோடி பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் போதே ஓரிடத்தில் தனக்கு பிடித்தமான உணவு கிச்சடிதான் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தினமும் அந்த உணவை விரும்பி சாப்பிடுவதாகவும், வெளியில் செல்லும் சமயங்களிலும் கூட கிச்சடி சாப்பிடும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமருக்கு கிச்சடி பிடிக்கிற காரணத்தினால்தான் இப்படி கிச்சடிக்கு மதிப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் மறுப்பு

    இந்த நிலையில் கிச்சடி தான் தேசிய உணவு என்று கூறப்படும் தகவலுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது ''கிச்சடி குறித்த பொய்யான தகவல்களை பரப்பியது போதும். கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக மட்டுமே சமைக்கப்படுகிறது'' என்று கூறினார். இக்கருத்தரங்கில் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடியை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடிக்கு டெல்லியில் பெரிய அளவில் மரியாதை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+