காரில் வந்து டோல்கேட்டில் கொள்ளையடித்த குரங்கு... பணத்துடன் தப்பிஓட்டம்.. உ.பி.யில் அதிர்ச்சி
கான்பூர்: இந்த உலகில் பல விசித்திரமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலத்தின் கான்பூர் சுங்கச்சாவடிக்கு காரில் வந்த குரங்கு, சுங்கச்சாவடியில் ஊழியரிடம் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பிஓடிவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே அக்பர்பூர் கோத்வாலி என்ற இடத்தில் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த சுங்கசாவடிக்கு கார் ஒன்று வேகமாக வந்தது. அப்போது காருக்குள் இருந்த குரங்கு கட்டணம் வசூலிப்பவரின் அறைக்குள் திடீரென தாவியது.

இதனால் மிரண் போய் பார்த்த ஊழியரை சோதித்த குரங்கு, அவரது பாக்கெட்டை நோட்டமிட்டது. பின்னர் ஊழியரின் அருகே மேஜையில் கட்டாக இருந்த ரூ.5 ஆயிரத்தை அபேஸ் செய்து கொண்டு தப்பிஓடிவிட்டது. அப்போது காரில் இருந்தவர் குரங்கிடம் இருந்து பணத்தை பறிக்க பார்த்தார். ஆனால் அது அவரிடம் இருந்தும் தப்பி ஓடி விட்டது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த ஊழியர் மிரண்டு போய் தப்பியோடிய குரங்கை வேடிக்கை பார்த்தார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதனிடைய குரங்கு பணத்தை திருடியது குறித்து காவல் துறையில் சுங்கச்சாவடி தலைமை அதிகாரி மனோஜ் சர்மா புகார் அளித்துள்ளார். எந்த காருக்குள் இருந்து குரங்கு குதித்து வந்ததோ அந்த கார் எண்ணை குறித்து வைத்துள்ள அதிகாரிகள் கார் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications