பஞ்சாப் நேஷனல் வங்கி மெகா முறைகேட்டில் மேலும் 3 வங்கிகளுக்கு தொடர்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

  மும்பை: மும்பை பரோடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடிக்கு மோசடி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இந்தியன் யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவற்றுக்கு தொடர்பிருப்பதாக தெரிகிறது.

  இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக அனுப்பியுள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  More banks involved in PNB fraudlent

  இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் இதில் பொதுத் துறை வங்கிகள் 2 மற்றும் 1 தனியார் வங்கிக்கு தொடர்பிருக்கலாம் என்றும் தெரிகிறது. அவை இந்தியன் யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியன ஆகும். இந்த வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியால் வழங்கப்படும் கடன் சார்ந்த ஆவணங்களை பெறுவதாக தெரிகிறது.

  இது தொடர்பாக மோசடியான கடன் சார்ந்த ஆவணங்கள் முதலில் வழங்கப்பட்டது ஜனவரி 16-ஆம் தேதி என்று பிஎன்பி வங்கி சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Union Bank of India, Allahabad Bank and Axis Bank are said to have offered credit based on letters of undertaking (LOUs) issued by PNB. These banks also involved in Rs.11000 crore fraudlent.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற