For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லிகாரர்கள் கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை: கிலா ரூ.80 'ஒன்லி'

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வரத்து குறைவால் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80க்கு விற்கப்படுவதால் மக்கள் கவலையில் உள்ளனர்.

டெல்லியில் திங்கட்கிழமை வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்டது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து வியாபாரிகள் சங்க உறுப்பினர் ராஜேந்திர சர்மா கூறுகையில்,

More misery for consumers as onion prices hit Rs 80/kg in Delhi

வெங்காய வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மேலும் உயரும். வெங்காய விலை இன்னும் சில வாரங்களுக்கு இப்படி தான் இருக்கும். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்குகிறார்கள். அந்த மாநிலங்களில்

வெங்காய இருப்பு இருந்தாலும் அதிக விலை கேட்கிறார்கள். மொத்த வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்கினால் சில்லறை வியாபாரத்திலும் அதன் விலை அதிகரிக்கத் தான் செய்யும்.

தரத்தை பொறுத்து வெங்காயம் ரூ.70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

டெலல்லியில் உள்ள காளி பாரி கோவில் அருகே வெங்காயம் விற்கும் முன்ட்டு கூறுகையில்,

கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.50 முதல் 60 வரை விற்றேன். ஆனால் இன்று ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80க்கு விற்பனை செய்கிறேன். நான் ஆசாத்பூரில் இருந்து வெங்காயத்தை கிலோ ரூ.60 முதல் ரூ.65க்கு வாங்கி கிலோவுக்கு ரூ.10 அதிகம் வைத்து விற்பனை செய்கிறேன் என்றார்.

விளைச்சல் குறைவு, போதிய இருப்பு இல்லாததால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Onions are adding to the misery of consumers, which at the retail level Monday shot up to Rs 80 per kg in the national capital due to tight supply despite the government's steps to keep a lid on prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X