For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் பெண்களுக்கு வீட்டில்தான் பாதுகாப்பில்லை – அரசு ஆய்வில் “திடுக்” தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு வீட்டில்தான் அதிக பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், கணவர் மற்றும் உறவினர்களால் அனுபவிக்கும் கொடுமை 38 சதவிகிதம் அளவில் உள்ளது.

பெண்களின் தன்மானத்தை தாக்கும் வகையில் நடந்துகொள்வது 23 சதவிகிதம் ஆகவும், கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் முறையே 17 சதவிகிதம் மற்றும் 11 சதவிகிதம் ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களின் நிலைமை:

இந்தியாவில் பெண்களின் நிலைமை:

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள "இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2014" என்னும் பதிப்பில்தான் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர்.

157 சதவீதம் புகார்கள்:

157 சதவீதம் புகார்கள்:

2012 ஆண்டை விட 2013 ஆம் ஆண்டில், "பெண்கள் அநாகரீகமான பிரதிநிதித்துவப்படுத்துவது" தொடர்பான புகார்கள் 157 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை:

பெண்களுக்கு எதிரான வன்முறை:

எனினும், 2013 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் தண்டனை விகிதம் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் சதவீதம்:

அதிகரிக்கும் சதவீதம்:

இதில் பாலியல் வன்முறை, வரதட்சணை சார்ந்த கொலை வழக்குகளின் தண்டனை விகிதம் 4.4 சதவீதம் ஆகவும், கடத்தல் போன்ற குற்றங்களின் தண்டனை விகிதம் வெறும் 2.5 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Women seem to be most unsafe in their homes while the conviction rate in crimes against women remains very low, a government study has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X